Labels

rp

Blogging Tips 2017

பி.இ., ரேண்டம் எண் இன்று வெளியீடு

சென்னை:பி.இ., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள, 1.89 லட்சம் மாணவர்களுக்கும், இன்று, "ரேண்டம்' எண் வெளியிடப்படுகிறது.விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும், கம்ப்யூட்டர் மூலம், பத்து இலக்க எண்கள் வழங்கப்படும். இதில், ஒரே, "கட்-ஆப்' மதிப்பெண், நான்காவது பாட மதிப்பெண், பிறந்த தேதி என, அனைத்தும் ஒரே இணையாக வரும் மாணவர்களில், யாரை, முதலில் கலந்தாய்வுக்கு அழைப்பது என்பதற்கு, இந்த, "ரேண்டம்' எண் மூலம், தீர்வு காணப்படுகிறது.அதன்படி, "ரேண்டம்' எண் மதிப்பு, யாருக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த மாணவர், "ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும் மாணவர்களில், முதலாவதாக, கலந்தாய்வுக்கு, அழைக்கப்படுவர். இன்று காலை, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், துணைவேந்தர் ராஜாராம் முன்னிலையில், "ரேண்டம்' எண் வெளியிடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், 15 முதல், 20 மாணவர்களுக்கு, "ரேண்டம்' எண் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டும், இதே எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, "ரேண்டம்' எண், பயன்படுத்த வேண்டிய நிலை வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a comment