Labels

rp

Blogging Tips 2017

சுயநிதி அரசு பிடிஎஸ் கட்டணம் ரூ.15,000 உயர்வு


மிழகத்தில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி.எஸ். (முதுநிலை பல் மருத்துவப் படிப்பு) அரசு ஒதுக்கீட்டு இடத்தைப் பொருத்தவரை "பாராகிளினிக்கல்' பிரிவு

கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.1.40 லட்சமாகவும், "கிளினிக்கல்' பிரிவு கல்விக் கட்டணம் ரூ.1.75 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு பிடிஎஸ் கட்டணம் எவ்வளவு? சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு 85 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு பி.டி.எஸ். இடத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.2,000 உள்பட ஆண்டுக் கட்டணமாக ரூ.10,290 மட்டும்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு அளவில் ஒரே ஒரு பல் மருத்துவக் கல்லூரி மட்டும் உள்ளதால், பி.டி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்கள் பெரும்பாலும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில்தான் சேர வேண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு 909 பி.டி.எஸ். இடங்களை அளிக்க உள்ளன. இந்த ஆண்டு அரசு பி.டி.எஸ். மற்றும் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குப் பிறகுதான் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். கலந்தாய்வு இடத்துக்கு கடந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1 லட்சமாக இருந்தது; சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரமாக நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு உயர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment