Labels

rp

Blogging Tips 2017

மனைவிக்காக நகைகள் லஞ்சமாக வாங்கிய கல்வி அதிகாரி கைது 219 கம்மல் உள்பட ரூ.40 லட்சம் நகைகள் பறிமுதல்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணசிங் யாதவ். இவர் உயர்நிலை கல்வி துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அவர் பல்வேறு பணிகளுக்காக நீண்ட நாட்களாக லஞ்சம் பெற்று வந்தார்.
பணத்துக்கு பதிலாக அவர் தனது மனைவிக்காக நகைகளை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.அப்போது அவரது வீட்டில் இருந்த 219 கம்மல்கள், 53 மோதிரங்கள், 36 வளையல்கள், 30 செயின்கள், 6 நெக்லஸ் உள்பட 1.4 கிலோ எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.38.14 லட்சம். அதோடு ரூ.3.54 லட்சம் மதிப்புள்ள 8.4 கிலோ வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ராதாகிருஷ்ணசிங் மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நகைகள் தவிர அவரிடம் ஒரு வீடு, வீட்டு மனை, சொகுசு கார்கள் என மொத்தம் ரூ.2.29 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment