Labels

rp

Blogging Tips 2017

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு 8000 புதிய வங்கி கிளை


நடப்பாண்டில் திறப்புதுடெல்லி : நடப்பாண்டில் வங்கிகள் புதிதாக 8000 கிளைகளை திறக்கவுள்ளன. மேலும், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தெரிவித்தார். டெல்லியில் நேற்று, பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயக் கடன், சிறு தொழில் கடன், கல்வி மற்றும் வீட்டு கடன்கள் வளர்ச்சியையும், நிதிநிலைமைகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொதுத் துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.1.55 லட்சம் கோடியாக உள்ளது. எனவே, அதிக கடன் பாக்கி வைத்துள்ள கணக்குகளின் மீது கவனம் செலுத்த கூறியுள்ளேன். இந்த பட்டியலில் 30 கணக்குகள் உள்ளன. கடன் தவணை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. கடந்த மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் டெபாசிட் வளர்ச்சி 14.91 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 14.4 சதவீதமாக இருந்தது. அதே சமயம், கடன் வளர்ச்சி 17.6 சதவீதத்தில் இருந்து 15.62 சதவீதமாக குறைந்துள்ளது.

விவசாயம், சிறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் தேவை அதிகமாக உள்ளது. எனவே, அடுத்த காலாண்டில் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் என நம்புகிறேன்.
நடப்பாண்டில் வங்கிகள் புதிதாக 8,000 கிளைகளை திறக்கவுள்ளன. அதே போல், புதிதாக 50,000 பேரை வேலைக்கு சேர்க்கவுள்ளன. புதிய வங்கிகளுக்கான லைசென்ஸ் வழங்குவதில் அரசுக்கு தொடர்பில்லை. ரிசர்வ் வங்கியே லைசென்ஸ் வழங்கும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment