Labels

rp

Blogging Tips 2017

பள்ளி மாணவருக்கு 9.14 லட்சம் பஸ் பாஸ் வினியோகம்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை, போக்குவரத்து கழகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை, 9.14 லட்சத்திற்கும் மேற்பட்ட பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த மாதம், 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன.
போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, ஏற்கனவே இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்ட பட்டியலில், தேவையான திருத்தம் செய்யப்பட்டு, கழகங்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில், பள்ளி மாணவருக்கான பஸ் பாஸ் தயாரித்து, வழங்கும் பணி, நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக, இப்பணியை, போக்குவரத்து கழகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் இருந்து, 1.49 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவருக்கு வழங்கப்பட்டன. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் பாஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதை, மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்தனர்.
விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், 1.10 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை போக்குவரத்து கழகம் சார்பில், 1.50 லட்சம்; கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில், 1.20 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் போக்குவரத்து கழகத்தில் இருந்து, 2.44 லட்சம் பஸ் பாஸ் வழங்க வேண்டும். இதில், 1.40 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. நெல்லை போக்குவரத்து கழகத்தில் இருந்து, 95 ஆயிரம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளன
.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் இருந்து திருத்தப்பட்ட பட்டியல் விரைவில் கிடைக்காததால், ஆரம்பத்தில் பஸ் பாஸ் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தற்போது பள்ளிகளில் இருந்து, 70 சதவீதம் திருத்தப்பட்ட பட்டியல் கிடைத்து விட்டதால், பணியை விரைவுப்படுத்தியுள்ளோம். சில வாரங்களில், பஸ் பாஸ் வழங்கும் பணியை முழுவதுமாக முடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment