Labels

rp

Blogging Tips 2017

வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில மொழியறிவு அவசியம் -கல்லூரிக் கல்வி மண்டல துணை இயக்குநர் ஏ.ரவிசங்கர்

வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில மொழியறிவு அவசியம் என்ற நிலை உள்ளதால் மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் பழக்கத்தைக் கல்லூரியில் மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்று கல்லூரிக் கல்வி மண்டல துணை இயக்குநர் ஏ.ரவிசங்கர் கூறினார்.
மேடவாக்கம் காயிதேமில்லத் கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி தொடக்கநாள் விழாவில் அவர் மேலும் பேசியது:
இங்கு பயிலும் மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் ஏழை, நலிந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களாக உள்ளனர். 85 சதவீத மாணவர்கள் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களாக இருப்பதால் அவர்களது ஆங்கில மொழியறிவுத் திறன் குறைவாக இருக்கிறது என்பது பெருங்குறையல்ல.
அதை உரிய உரையாடல் பயிற்சி மூலம் மேம்படுத்த முடியும். பிரபல பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்களைவிட சாதாரண சிறிய நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்தான் மகத்தான சாதனைகள் நிகழ்த்தி வந்துள்ளனர் என்பதற்கு நானே சிறந்த உதாரணம் ஆகும்
.
எனவே, எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இன்றி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை முழு ஈடுபாடுடன் பயில வேண்டும் என்றார்.
விழாவில் அரசுப்பணி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள கடந்த ஆண்டு மாணவி கே.கல்பனாவை பாராட்டி கெüரவித்தனர். காயிதே மில்லத் கல்லூரி செயலர் தாவூத் மியாகான், முதல்வர் ஏ.ராபி, கல்லூரி துணைத் தலைவர் டி.எஸ்.மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment