Labels

rp

Blogging Tips 2017

டைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம் தமிழகத்தில் 54 ஆயிரம் பேர் பங்கேற்பு கம்ப்யூட்டர் தேர்வில் சாதனை.

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்வுகள் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை முன்னிட்டு இத்தேர்வு வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதிக்கு மாற்றி
வைக்கப்பட்டுள்ளது.வரும் 31ம் தேதி தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் ஜூனியர் பிரிவு 4ம் பேட்ஜ் வரை காலை 9.30 மணி முதல் மாலை 4.05மணி வரை நடக்கிறது. வரும் 1ம் தேதி தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு 5ம் பேட்ஜ்க்கு காலை 8.30 மணி முதல் 9.35 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து காலை 10.20 மணி முதல் 3.20 மணி வரை சீனியர் பிரிவுக்கு தேர்வு நடக்கிறது.வரும் 1ம் தேதி காலை 10.20 மணி முதல் 12.20 மணி வரைடைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஹை ஸ்பீடு தேர்வுகளும், அன்று மாலை 3.50 மணி முதல் 4.40 மணி வரை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர் பிரிவுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்குரிய ஹால் டிக்கெட்டுகள் அந்தந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் அனுப்பபட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பிரிவு தட்டச்சர் பணிக்கு டைப்ரைட்டிங் அவசியம் என்பதால் பலர் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment