Labels

rp

Blogging Tips 2017

சுமார் 60 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகளை இன்றைய ஆசிரிய சமுகம் தக்க வைத்துக் கொள்வதோடு அடுத்த இடத்தைப் பெற்றுத் தர நமது கடமை என்ன? thanks to. தஞ்சை ஜோதி தமிழன்

"உங்களுக்குக் கல்வி கற்பித்த
ஆசிரியரையும்,கடவுளையும் ஒரே சமயத்தில்
ஒரே இடத்தில் சந்தித்தால்,நீங்கள் யாருக்கு
முதலில் வணக்கம் செய்வீர்கள்"?
என சுவாமி குரு நானக்கிடம் அவரது சீடர் ஒருவர் கேட்டாராம்
அதற்கு சுவாமி குரு நானக் கூறியது" நான் முதலில் என் ஆசிரியருக்கு
வணக்கம் செய்து விட்டுத்தான் கடவுளை
வணங்குவேன் காரணம் கடவுள் ஒருவர் இருக்கிறார்
அவரை வணங்க வேண்டும் என்று எனக்க எடுத்துரைத்தவர்
எனது ஆசிரியர்தான் என்றாராம்"
இந்தளவுக்கு மக்களின் மரியாதைக்குரியவர் ஆசிரியர்

"நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய வரலாறு
மண்ணின் படிமானங்களில் கிடைத்த
பூமியின் தடங்கள்,
புவியியலுக்கு
வரைந்த வரலாறு

இவற்றை எல்லாம்
யாவர்க்கும் கற்றுத் தரும்
ஆசிரிய இனம்
கற்றுத் தந்தவரை
பெற்றுக் கொண்டது பெரிதாக ஒன்றுமில்லை...

காலம் செய்யுமென்று
காத்திருந்து பார்த்துவிட்டுத்
தன் உரிமைக்காக
உறுத்தெழுந்து
களமிறங்கிப் போராடிக்
கனல் குளித்தபின்னால்
வராலாற்றுப் பாதையில்
கால்பதித்துப் பெருமையுற்ற
நமது ஆசிரியர் இயக்க ஒற்றுமை.

சுமார் 60 ஆண்டுகள் போராடிப்
பெற்ற உரிமைகளை
இன்றைய ஆசிரிய சமுகம்
தக்க வைத்துக் கொள்வதோடு
அடுத்த இடத்தைப் பெற்றுத் தர
நமது கடமை என்ன?

கடந்த கால வரலாறு தெரியாத
நம் இன வாரிசுகளுக்குத்
தெரிவிக்க வேண்டியது
நமது கடமையல்லவா?
களத்தில் நின்று
உணர் ஒன்றிப் போராடிய
மாவீரர்கள் ஓரிருவர்
நெஞ்சில் நினைவாக மட்டுமல்ல...

நமது தமிழ்ச் சமுதாயத்தின்
வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும்
கல்வியே அடிப்படை உரிமை
கடமையை செய்வோம்
உரிமையைப் பெறுவோம்

ஏற்றதொரு கொள்கையிலே இடறி வீழேன்!
எதுவரினும் அஞ்சேன்!
சாற்றறிய சமுதாயப் புற்று நோய்யை விரட்ட
நான் கற்ற கல்வியை கற்பிப்பதாலே செய்வேன் !
என எடுத்துரைப்போம்
thanks to.
தஞ்சை ஜோதி தமிழன் <gnanajothi.s6@gmail.com>

No comments:

Post a Comment