சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திரதின
விழாவில் முதல்–மந்திரி ராமன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளை
அறிவித்தார்.
அதில் முக்கியமானவை;
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60–ல் இருந்து 62 ஆக உயர்த்தப்படும். இந்த
திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசின்
நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும்
பொருந்தும். இந்த திட்டம் இந்த மாதம் (ஆகஸ்டு) முதல் அமலுக்கு வரும
இவ்வாறு முதல்–மந்திரி ராமன்சிங் கூறினார்.
No comments:
Post a comment