rp

Blogging Tips 2017

விடுமுறை நாட்களில் தொடர் பயிற்சி தேர்வுகளில் சீனியாரிட்டி புறக்கணிப்பு முதுகலை ஆசிரியர்கள் கண்டனம்.

விடுமுறை நாட்களில் பயிற்சிகள் நடத்தப்படுவதற்கு முதுகலை ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வரும் 31ம் தேதி சனிக் கிழமை பள்ளி வேலை நாளாகும். வரும் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கு வேதியியல் பாடம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 14ம் தேதி சனிக்கிழமை காலாண்டு தேர்வுகளைமுன்னிட்டு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, தொடர்ந்து விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு வேலை நாட்களாக செயல்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில்
பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். இதுசம்பந்தமாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனருக்கு நேற்று தந்திகள் அனுப்பபட்டன.மேலும், ஆசிரியர் தகுதி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சீனியாரிட்டி முறை கடைபிடிக்கப்படாமல் பணியில் இளையவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் துறைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் செயற்குழு கூட்டத்தில் இதுசம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் அய்யாதுரை, செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் ஆசீர் சார்லஸ், தளவாய், சிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 comments

No comments:

Post a Comment