ராமநாதபுரம் டவுன் பகுதியில் மட்டும் 1600பேருக்கு இலவச
பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் பயணம் செய்ய
முடியாமல் சிரமப்படுகின்றனர். கிராமப்புற மாணவர்கள் சீருடை
அணிந்திருந்தும், இலவச பஸ் பாஸ் இல்லாததால் நடு வழியில் இறக்கி விடும்
சம்பவம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம், இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விண்ணப்பித்து, ஒரு சில நாட்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய இலவ பஸ் பாஸ் அனுப்பப்படும்.
கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பள்ளிகளில் பயணிக்கும் மாணவர்கள் பஸ் டிரைவர்களின் "கெடுபிடி"யால் பரிதவித்து வருகின்றனர். அவசர கதியால், சீருடை அணிந்தும் பாஸ் இன்றி பயணிக்கும் மாணவர்களை நடு வழியில் இறக்கி விடும் பரிதாபம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்று கண்டிப்பு காட்டும் கண்டக்டர்களிடம், ஒரு சில பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம் டவுன் பகுதியில் மட்டும் 1600 மாணவர்களுக்கு பாஸ் வழங்காமல் இழுபறி நிலை நீடிக்கிறது. இது தவிர கிராமப்புறங்களிலும் பலர் பாஸ் பெறவில்லை, என புகார் எழும்பியுள்ளது.
காரைக்குடி மண்டல போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: "மாவட்டத்தில் 34 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் டவுனில் மட்டும் 16 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர, அவ்வப்போது தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ் கண்டர்கள் ஒரு சிலர் மாணவர்களிடம் கண்டிப்பு காட்டுவது குறித்து புகார் வந்தது.
இப்புகார் குறித்து, கண்காணிப்பு குழு மூலம் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்திருந்தாலே போதும், அவர்களிடம் பாஸ் கேட்கக்கூடாது என, கண்டக்டர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது," என்றார்.

No comments:
Post a comment