Labels

rp

Blogging Tips 2017

மாணவர்களுக்கான இலவச பொருட்களை பள்ளியில் வழங்க கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச சீருடையை, நேரிடையாக பள்ளிகளுக்கே வழங்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, ஆண்டுக்கு மூன்று செட் சீருடை, முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், செருப்பு, புத்தக பை, ஜாமன்றி பாக்ஸ் என 14 வகையான இலவச பொருட்களை வழங்கி வருகிறது
.
இவை அனைத்தையும், அந்தந்த ஒன்றியத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்திலேயே இறக்கி வைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளும் உண்டு.
இப்பள்ளி ஆசிரியர்கள் இலவச பொருட்களை, ஒவ்வொரு முறையும் வேன் பிடித்து, சொந்த செலவில் எடுத்து செல்கின்றனர். இதை தவிர்க்க, அரசே மதுபான கடைகளுக்கும், ரேசன் கடைகளுக்கும், பள்ளிகளுக்கான சத்துணவு மையங்களுக்கும், சரக்குகளை இறக்கி செல்வது போல், ஒன்றிய வாரியாக உள்ள பள்ளிகளுக்கும், இலவச பொருட்களை இறக்கி செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment