Labels

rp

Blogging Tips 2017

பட்டப்படிப்பில் குறுங்கதை, நாவல்: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.

பட்டப் படிப்பில், தமிழ் மொழி பாடத்தில் இடம் பெற்றுள்ள, குறுங்கதை மற்றும் நாவலை அகற்றக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, சென்னைப் பல்கலைகழகத்துக்கு, நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழ் விரிவுரையாளர், ஜெய் சம்யக் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல்செய்த மனு: பி.ஏ., - பி.எஸ்.சி., - பி.காம்., பட்டப் படிப்புகளுக்கு, தமிழ் மொழி பாடத்தில்,
புதுமைப்பித்தன் எழுதிய, ஐந்து குறுங்கதைகள், வண்ண நிலவன் எழுதிய, நாவல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்தப் புத்தகங்களை வாங்கி படித்தேன்."துன்பக்கேணி" என்கிற குறுங்கதையும், "கடல் புறத்தில்" என்ற நாவலையும் படிக்கும் போது, அதிர்ச்சி அடைந்தேன். ஆதிதிராவிட சமூகத்தை, அவதூறு செய்யும் விதத்தில், இவை உள்ளன. இவற்றை எப்படிபாடத்திட்டத்தில் சேர்த்தனர் என தெரியவில்லை. இவற்றைப் படிக்கும், ஆதிதிராவிட சமூக மாணவர்கள், வருத்தம் அடைவது மட்டுமல்லாமல், மற்ற சமூகத்தினரின் அவமானத்துக்கும் உட்படுத்தப்படுவர்.எனவே, தமிழ் மொழி பாடத்தில் இடம் பெற்றுள்ள, குறுங்கதை மற்றும் நாவலை நீக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சத்தியசந்திரன் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, உயர் கல்வித்துறைச் செயலர், சென்னைப் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிட்டது. விசாரணையை, செப்., 19ம் தேதிக்கு, தள்ளிவைத்தது.

No comments:

Post a comment