Labels

rp

Blogging Tips 2017

நாமக்கல் நகரில் 22/9/13 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்கள்



1. தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு நடுவணரசுஇணையான ஊதியம் வழங்குக-தர ஊதியம் 4200வழங்குக.

2.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்ய்வூதிய திட்டத்தை அமுல் படுத்துக

3.முக்கிய இந்த இரு கோரிக்கைகளை அமுலாக்க தமிழக அரசி னை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்து வட்டாரக்கிளைகள் தனது செயற்குழுவினைக்கூட்டி தீர்மானமிட்டு,அத்தீர்மானத்தினை கோரிக்கை கடிதமாக தமிழக முதல்வர்,மற்றும்தமிழக அரசுக்கும் ஒரே நாளில் கிடைக்கும் வண்ணம் தீர்மான நகல்கள் அனுப்பி வைப்பது,
(வட்டாரக்கிளைகள் -தீர்மானம் அனுப்ப வேண்டிய நாள்-30/09/13)

4. பொதுச்செயலாளர் வரும் 08/10/13 அன்று அதிகாலை அமெரிக்க சுற்றுப்பயனம் முடித்து தாயகம் திரும்புகிறார்.அவருக்கு அனைத்து மாவட்ட /வட்டார கிஅலைகளின் பொறுப்பாளர்கள்கலந்து கொண்டு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வறவேற்பு அளிப்பது,

5.அனைத்து பள்ளிகளிலும்அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி மட்டுமே அமுல் படுத்திட வேண்டும்.ஆங்கிலவழிக் கல்வியை கைவிடவேண்டும்

6.அரசுபள்ளிகளில் புத்தகவழிமற்றும் அட்டைவழிக்கல்வி என இரண்டும் நடைமுறையில் உள்ளது ,ஆனால் தனியார் சுயநிதிப்பள்ளிகளில்புத்தக வழிக்கல்விமட்டுமே நடத்தப்படுவதால் பொதுமக்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்கிண்ரணர்.இதனால் அரசுப்பள்ளில்மாணவர் விகிதம் குரைகிரது.எனவே தமிழக பள்ளிகள் அனைத்திலும் ஒரே கல்விமுறையை தமிழக அரசை அமுல் படுத்த வலியுறுத்துகிறது.

7.எல்லா பள்ளிகளுக்கும் கணினி மற்றும் இண்டர்நெட் வசதி தருக

8.அரசாணைகளை உடனுக்குடன் ஒரு மாதகால அவகசத்திற்குள் நிறைவேற்ற அலுவலர்கட்கு உத்திரவிட தமிழக் அரசினைக்கோருகிரது

9.வாய்மொழி நிர்வாகத்தை கைவிடுக

10.AEEO,DEEO.அலுவலகங்களில் தன் பதிவேடு,வழங்கல் பதிவேடுகளை முறையாக பராமரிக்க கோருதல்

11. ஒரே புள்ளி விவரங்களை திரும்ம,திரும்ம கேட்பதை தவிர்க்க

12.சத்துணவு உண்பவர்களுக்கு மட்டுமிண்றி அனைத்து பள்ளிமாணவர்கட்கும் 4 செட் இலவச சீருடை வழங்குக

13.அனைத்து விலையில்லா பொருட்டஐயும் பள்ளிக்கே கொண்டு வந்து தருக

14.அடிப்பட விதி {FR-4(iii)} விதியின் படி,பதவி உயர்வில் செல்லாமல் கீழ்நிலையிலேயே பணியாற்றி இருந்தால் அதிக ஊதியம் பெறும் நிலையிருப்பின் ,பதவி உயர்வில் சென்றவர் அதனை சமன் செய்யும் இவ்விதியின் படி தகுதியுள்ளவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்துதர உரிய ஆனைகள் வழங்க கோருகிறது

15.தேர்வுநிலை/சிரப்புநிலைக்கு கூடுதல் 3% ஊதிய உயர்வு(3+3=6%) வழங்கியதைப்போன்று பதவி உயர்வுக்கும் 3%+3%=6% வழங்குக.

16.மூத்தோர் ,இளையோர் ஊதிய முரண்பாட்டினை பணி நியமன நாளை அடிப்படையாகக்கணக்கிட்டு களையவேண்டுகிறது.(ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் வந்ததைக்கருத்தில் கொள்ளாமல்)

17.தொடக்கப்பள்ளி இயக்கங்கள்அனைத்தும் சேர்ந்து ஒருங்கிணைந்த போராட்ட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment