Labels

rp

Blogging Tips 2017

அண்ணாமலைப் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக்கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.

வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் விபரம்: பி.எல்.ஐ.எஸ்., எம்ஏ- பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், வரலாறு மற்றும் டூரிசம் மேனேஜ்மெண்ட், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், டிரான்சிலேஷன் ஸ்டெடிஸ், ரூரல் மேனேஜ்மெண்ட், பிலாசபி, ரிலீஜியன் மற்றும் கல்சர், டெவலப்மெண்ட் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், எக்ஸ்டென்ஷன் மேனேஜ்மெண்ட், என்ஜிஒ மேனேஜ்மெண்ட், அஸ்டிராலஜி, ஹியுமன் ரைட்ஸ், எம்எல்ஐஎஸ்., எம்எஸ்சி- விலங்கியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், அப்ளைடு சைக்காலஜி, எல்டிரானித் சயன்ஸ், ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.எஃப்.ஏ- டிஜிட்டல் கிராபிக்ஸ் டெக்னாலஜி மற்றும் எம்.ஹெச்.சி., எம்.டான்ஸ்., எம்.மியுசிக்., எம்.காம்- கோஆப்பரேட்டிவ் மேனேஜ்மெண்ட், கம்யூட்டர் அப்பிளிகேஷன்ஸ், எஜுகேஷன் மேனேஜ்மெண்ட், என்டர்பிரனர்ஷிப்.
தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359; மேலும் தங்களின் மொபைல் போனில் RCQ Enr.no/ RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு குறுந்தகடு அனுப்பி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment