Labels

rp

Blogging Tips 2017

சத்துணவு முட்டையில் கொத்துக் கொத்தாக புழுக்கள்

கடலூர் மாவட்டம், பண் ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விநி யோகிக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி, அதில் கொத்துக் கொத்தாக புழுக் களும் நெளிந்தன.

இதனைக் கண்ட சத்துணவு ஊழியர்க ளும், பள்ளிக்குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேர டியாக விசாரனை நடத்தினர்.பண்ருட்டி ஒன்றியம், பூங் குணம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.மாணவர்களுக்கு மதிய உணவின் போது வழங்க வேண்டிய முட்டைகளை, ஒப் பந்ததாரர்கள் செவ்வாய்க் கிழமை காலை கொடுத்துள்ள னர். அட்டைகளில் இருந்த முட்டைகளை திறந்து பார்த்த போது, முட்டைகள் அழுகியும், உடைந்தும் இருந்தது. உடைந்த முட்டைகளில் இருந்து புழுக்கள் நெளிந்தன. கடும் துர்நாற்றமும் வீசியது.

இதனைக் கண்டு சத்துணவு ஊழியர்கள், பள்ளிக் குழந்தை கள் அதிர்ச்சி அடைந்தனர். சேத மடைந்தவை தவிர மீதமுள்ள முட்டைகளை பணியாளர்கள் வேக வைத்து உரித்தனர். இதி லும் சுமார் 60-க்கும் மேற்பட்ட முட்டைகள் கெட்டுப் போயிருந் தது கண்டறியப்பட்டது.இதனால், செவ்வாய்க் கிழமை பள்ளியில் மதிய உண வின்போது பெரும்பாலான மாணவர்களுக்கு முட்டைகள் சரிவர வழங்கப்படவில்லை. இது குறித்து சத்துணவு பணி யாளர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது:-சத்துணவுக்குத் தேவைப் படும் முட்டைகள், அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி யில் இருந்து கொண்டு வரப் படுகிறது.

அப்போது, முட்டை கள் உடைந்து வருவது வழக் கம். ஆனால், இன்று விநி யோகிக்கப்பட்ட முட்டைகள் அழுகிப்போய் புழுக்களுடன் இருந்தது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.அதிகாரிகள்விசாரணைஇதுகுறித்து மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உஷாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி உள்ளிட்டோர் சம் பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். நாமக் கல்லில் இருந்து முட்டை வியா பாரிகளும் பள்ளிக்கு வந்திருந் தனர். இதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க உள்ளனர்.

தொடர்பு கொள்ள முடி யாத அதிகாரிமுட்டையில் புழுக்கள் இருந்தது குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (சத்துணவு) அலுவலகத் திற்கு சென்று விபரம் கேட்ட போது, அதிகாரி ‘கேம்ப்’ (சுற்றுப்பயணம்) சென்றுள் ளார் என்பதை தவிர வேறு எந்த பதிலும் வரவில்லை.உதவியாளர் உஷாராணி யின் செல் நெம்பரை கேட்டதற்கு தெரியாதென்றனர். அவர் போனில் பேசினால் மட்டுமே கேட்டுக்கொள்வோம். அவ ருக்கு கொடுக்கப்பட்ட அரசு செல் நம்பரை ரகசியமாக வைத்துள்ளார் என்று கூறி னார்கள்.

தகவல் உரிமை சட்டம் அமலில் இருந்தும் அதிகாரிக்கு அரசால் கொடுக்கப்பட்ட செல் எண்ணைக் கூட பெற முடியாத அவல நிலை கடலூரில் உள் ளது.இது குறித்து சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரெங்கசாமி கூறிய தாவது:-முட்டை கொள்முதல் டெண்டர் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது சென்னை யில்தான் டெண்டர் விடுகின்ற னர். வாரம் வெள்ளிக்கிழமை மட்டும்தான் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றி வந்து இறக்குகின்றனர். வரும்போதே பழைய முட்டையைதான் ஏற்றி வருகின்றனர். இதனால் இது போன்ற பிரச்சனை வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலகத் திலும் தரக்கட்டுப்பாட்டு அதி காரிகள் பரிசோதனை செய் வதில்லை.இவ்வாறு அவர் தெரி வித்தார்.

சமீபத்தில்தான் வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க கொள்முதல் செய்யப் பட்ட முட்டைகளை ஒரு அறை யில் வைத்திருந்தனர். அப் போது அந்த வழியாக சென்ற வர்கள் துர்நாற்றம் அடிப்பது குறித்து தகவல் கொடுத்தனர். பிறகு அந்த அறையில் வைத் திருந்த முட்டைகளை சோதனை செய்தபோது கெட்டுப்போனது கண்டுபிடிக்கப்பட்டது.

சத்துணவுத்துறை அமைச் சர், உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்பட பலரும் ஆய்வு செய்தனர். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடந் தால் முட்டைகளை வழங்கும் சப்ளையர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அந்த பிரச்சனை ஓய்வதற்குள் கடலூர் மாவட்டத் தில் மீண்டும் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.மாணவர்களுக்கு வழங் கப்படும் சத்துணவு ஆரோக்கி யமானதாகவும், சுகாதாரமான தாகவும் இருக்க வேண்டும். இதில் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அரசு பலமுறை அறி வுறுத்தி வருகிறது.

சத்துணவை சத்துணவு அமைப்பாளர் சாப் பிட்ட பிறகே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என வும் அரசு உத்தரவிட்டுள்ளது. முட் டைகொள்முதல், மையங் களுக்கு விநியோகிப்பது உள் ளிட்டவற்றில் தனியார் ஒப்பந்த முறையே நடைமுறையில் உள்ளது.

இதில் பல மட்டங் களில் ஊழல்களும், முறை கேடுகளும் நடைபெறுவதாக அவ்வப்போது குற்றச் சாட்டுகள் எழுகின்றன.ஆனால் இப்போது புழுக் களுடன் முட்டைகள் வினி யோகித்திருப்பது என்பது பள்ளிக்குழந்தைக ளின் உயிர் மீது எந்த அளவிற்கு அலட்சி யம் காட்டுகின்றனர் என்பதற் கான சான்றாக உள்ளது.

No comments:

Post a comment