Labels

rp

Blogging Tips 2017

"புதுமையானவற்றை மாணவர்கள் கண்டறிய வேண்டும்"

 "புதுமையானவற்றை கண்டறிய மாணவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என கடலோர காவல் பாதுகாப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி., பேசினார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ., கோவை கிளை) சார்பில், "எச்.ஆர்., கான்கிளேவ்- 2013" எனும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது. "நிலையான வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள்" எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கடலோர காவல் பாதுகாப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:

"மொத்தம் 2,000 இன்ஜினியர்களே உள்ள இஸ்ரேல் நாட்டில் ராணுவத்துக்கு தேவையான பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 500 இன்ஜி., கல்லூரிகள் உள்ளநிலையில், புதுமையானவற்றை கண்டறிய மாணவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அணுகுண்டு தாக்குதலுக்குப்பின், ஏழை நாடாக இருந்த ஜப்பான் பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருமாறியது. இதற்கு, அந்நாட்டினரின் தொடர் முயற்சியும், உழைப்புமே காரணம். திறமைகளை பயன்படுத்தவில்லை எனில், நம் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும்.
ஜப்பானியர்கள் காலையில் நிறுவனத்துக்கு வரும்போது, நிறுவனம் சார்ந்த பாடல்களை பாடி, பணியை துவங்குகின்றனர். பணிக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று நினைப்பதை விட, பணியை திருப்திகரமாக செய்தால், கூடுதல் ஊதியம் தானாக வரும். நிறுவனம் என்பது குடும்பத்தை போன்றது; அதில் பணியாளர்கள் நேர்மையாக இருப்பதே முக்கியம்." இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment