ஆர்.கே.பேட்டை: பழுதடைந்த கட்டடத்தில்
செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிக்கூடம், எந்த நேரத்திலும் இடிந்து
விழலாம் என அச்சத்தில், மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கேற்ற வகையில் போதிய கட்டட வசதி இல்லை. இங்குள்ள ஐந்து கட்டடங்களில்,
கடந்த 2006-07ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பழுது பார்த்தல் பணி மேற்கொள்ளப்பட்ட வகுப்பறை கட்டடம், அவ்வப்போது, இடிந்து விழுகிறது. கட்டடத்தின் சிமென்ட் மேல் தளம் உதிர்ந்து வருகிறது.
கட்டடத்தின் முகப்பு பகுதியில், ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை காணும் மாணவர்கள், அச்சத்துடனே பாடம் படித்து வருகின்றனர். புதிய கட்டடம் கட்டி, வகுப்பறையை அந்த கட்டடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "புதிய கட்டடம் கட்ட, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

No comments:
Post a comment