Labels

rp

Blogging Tips 2017

கோவையில் அங்கீகாரமில்லாத 28 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

கோவை வருவாய் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 28 பள்ளிகளுக்கு  இரண்டாம் கட்ட நோட்டீஸை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார்.
இக்கல்வியாண்டில் அங்கீகாரம் புதுப்பிக்காமல் மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் நிலைகள் குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோவை வருவாய் மாவட்டத்தில் 28 பள்ளிகள் அங்கீகாரம் இல்லமாலும் அங்கீகாரத்தை புதுப்பிக்காமலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு தற்போது இரண்டாவது கட்டமாக நோட்டீஸை கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயராஜ் அனுப்பியுள்ளார். இதில் மூன்று மாதத்திற்குள் பள்ளிகளின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவும், அங்கீகாரத்தை புதுப்பித்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயராஜ் கூறுகையில் “கோவையில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது இதில் சம்பந்தப்பட்ட 28 பள்ளிகளுக்கு 2வது கட்ட நோட்டீஸை அனுப்பியுள்ளோம். இதில் மூன்று மாதத்துக்குள் சம்மந்தப்பட்ட பள்ளிகள் பதில் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் என கண்டுபிடிக்கப்பட்ட 28 பள்ளிகளில் 19 பள்ளிகள் நகர பகுதிகளில் உள்ளது.
மேலும் இந்த பள்ளிகளில் பொதுமான நிலப்பரப்பு இல்லை. பொதுவாக நகர பகுதியில் ஒரு பள்ளி 33 சென்ட் நிலப்பரப்பிலும், மாநகராட்சி பகுதியில் ஒரு பள்ளி 55 சென்ட் நிலப்பரப்பிலும், டவுன் பஞ்சாயத்து பகுதியில் ஒரு பள்ளி ஒரு ஏக்கர் நிலப்பரப்பிலும், கிராம பஞ்சாயத்து பகுதியில் ஒரு பள்ளி 3 ஏக்கர் நிலப்பரப்பிலும் செயல்பட வேண்டும். தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள பள்ளிகளின் நிர்வாகம் மூன்று மாதத்திற்குள் சரியான பதில் அளிக்கவில்லை என்றால், சம்மந்தப்பட்ட பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment