rp

Blogging Tips 2017

பள்ளியில் பல் இளிக்குது சுகாதாரம் ஜொலிக்குது "அம்மா உணவகம்' - தினமலர் செய்தி

மாநகராட்சி பள்ளிக்குள், "அம்மா உணவகம்' அமைக்க காட்டிய ஆர்வத்தை, அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, அதிகாரிகள் காட்டவில்லை என, புகார் எழுந்துள்ளது.
மசக்காளிபாளையத்தில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 123 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்குள் அமைந்துள்ள அங்கன்வாடி, குழந்தைகள் நலமையத்தில் 50 மழலைகள் உள்ளனர். பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
கோவை மாநகராட்சியின் கீழ், 16 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 15 நடுநிலைப்பள்ளிகள், 41 நடுநிலைப்பள்ளிகள், சிறப்பு பள்ளி ஒன்று என, மொத்தம் 83 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பொதுவாக பள்ளிகள் என்பது, அடிப்படை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செயல் திட்டங்களை வகுக்கவேண்டும். மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக வகுப்பறைகளாக பயன்படுத்தப்பட்ட கட்டடம் தற்போது, "அம்மா உணவகமாக' மாற்றப்பட்டுள்ளது
.
அம்மா உணவகம் அமைக்க பல இடங்கள் இருந்தும், பள்ளியின் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், எதிர்காலத்தில் பள்ளியை விரிவுபடுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டவும், போதிய இடங்கள் இல்லாத நிலை ஏற்படும்.
இப்பள்ளியில் அமைந்துள்ள அங்கன்வாடி குழந்தைகள் நல மைய மாணவர்களுக்கு கழிவறைகள் இருந்தும், அதை சரிவர பராமரிக்காமல், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. போதிய தண்ணீர் தொட்டி, கழிவறை, நடைபாதை போன்றவை சுகாதாரமில்லாத சூழலில் விடப்பட்டுள்ளன. பள்ளியில், அம்மா உணவகத்தை அமைக்கக் காட்டிய ஆர்வம், இதுபோன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு காட்டப்படுவதில்லை.
பொதுமக்கள் கூறுகையில்,""அம்மா உணவகம் நல்ல திட்டமாக இருந்தாலும், அதை சரியான இடத்தில் வைப்பது அவசியம். இப்பள்ளிக்கு எதிரே மாநகராட்சி வணிக வளாகம் அமையும்போது, அங்கேயே மாற்றி அமைக்கலாம். மாணவர்களுக்கு பயன்படும் வகையில், நூலகங்கள், ஸ்மார்ட் கிளாஸ், அடிப்படை கணித ஆய்வகம் போன்றவற்றுக்கு இந்த இடத்தை பயன்படுத்த அனுமதிக்கலாம். மாணவர்கள் குறைவு என்பதற்காக கட்டங்களையும் பிற பயன்பாட்டுக்கு அனுமதித்தால், எதிர்காலத்தில் பள்ளிகள் இல்லாமல் போய்விடும், '' என்றனர்.

No comments:

Post a Comment