Labels

rp

Blogging Tips 2017

மழை காரணமாக மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு தள்ளிவைப்பு

யல் மற்றும் கன மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2013-14-ஆம் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புயல் மற்றும் கன மழை காரணமாக அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அந்தத் தேர்வு நடைபெறும். ஏற்கெனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட அதே தேர்வு மையத்தில் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் ஆண்டுதோறும் தேசியத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அளவில் நடத்தப்படும் இந்தத் தேர்வின் மூலம் திறன் வாய்ந்த மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கல்வி உதவித் தொகையை என்.சி.இ.ஆர்.டி. மாதம்தோறும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment