rp

Blogging Tips 2017

கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்.

பல்வேறு கணக்கெடுப்பு,வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் என கற்பித்தலுடன்,பல பணிகள் கூடுதலாக செய்யவேண்டிஉள்ளதால்,ஆசிரியர்கள்
பாதிக்கப்படுகின்றனர்.அன்னூர் ஒன்றியத்தில்75துவக்க, 16நடுநிலைப் பள்ளிகளில், 6,000மாணவ,மாணவியர் படிக்கின்றனர்.
அனைத்து பள்ளிகளிலும் சத்துணவுமையங்கள் செயல்படுகின்றன.  "அனைவருக்கும்   கல்வி இயக்கம்'சார்பில்,துவக்கப்பள்ளிகளுக்கு பள்ளி கட்டடங்கள்    பழுதுபார்ப்பு மானியம் ரூ.5,000,பராமரிப்பு மானியம் ரூ.5,000வழங்கப்பட்டது.நடுநிலைப் பள்ளிகளுக்கு,தலா10ஆயிரம் வீதம்20ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் தொகை வழங்கியபோது, "எந்த பணிக்கு செலவிட வேண்டும்;என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்'என,தெரிவிக்கப்பட்டது.இரு வாரங்களுக்கு முன்,அனைத்து துவக்க,நடுநிலைப் பள்ளிகளும்,ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் பெயருக்கு,ரூ.3,000க்கு வங்கி வரைவோலை (டி.டி.,)எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் வரைவோலை எடுத்து,அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.இந்நிலையில்,இருநாட்களாக,அனைத்து துவக்க,நடுநிலைப் பள்ளிகளும்,வரைவோலையை வந்து திரும்ப பெற்றுக் கொள்ளும்படியும்,அதை வங்கியில் மீண்டும் ரொக்கமாக்கி சம்மந்தப்பட்ட கணக்கில் வைக்கவும் அறிவுறுத்தினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கற்பித்தலில் புதிய மாற்றங்கள்,சமச்சீர் பாடத் திட்டம்,முப்பருவ கல்வி திட்டம் ஆகியவற்றால் கற்பித்தலில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே ஆசிரியர்கள் பல்வேறு கணக்கெடுப்பு,வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் என கற்பித்தலுடன்,பல பணிகள் கூடுதலாக செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில்,பராமரிப்பு பணிக்கு வரைவோலை எடுக்க,கிராமப்புறத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் நகருக்கு வந்து சென்றதில் அரை நாள் பணி பாதிக்கப்பட்டது. மீண்டும் அந்த வரைவோலையை ரத்து செய்து ரொக்கமாக்க,கிராமத்தில் இருந்து நகருக்கு வந்து சென்றால்,அரை நாள் கற்பித்தல் பணி பாதிக்கப்படும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் தவிர,இதர பணிகள் வழங்குவதால்,அலைக்கழிப்பும்,கற்பித்தலில் குறைபாடும் ஏற்படும் வாய்ப்புஉள்ளது. இதை தவிர்க்க,அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment