Labels

rp

Blogging Tips 2017

மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் கன்னட வழி கல்வி பள்ளிகள் மூடப்படாது-முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு!

கன்னட வழி கல்வி
கன்னட வழி கல்விக்கு முக்கியத்துவம் மற்றும் 1–ம் வகுப்பு முதல் ஆங்கில கல்வி ஆகியவற்றில் ஆட்சேபனை இல்லை என்பது அரசின் முடிவு. கன்னட வழியில் படிப்பவர்கள் சாதனையாளர்களாக உருவாகிறார்கள். அதேபோல் 1–ம் வகுப்பு முதல் ஆங்கில கல்வி அளிக்கவும் அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.
மொழி மற்றும் மொழி வழி கல்வி ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த அளவுக்கு கன்னடர் என்ற உணர்வுடன் வாழ்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கன்னடர்கள் கொடை குணம் மிக்கவர்கள். கர்நாடகத்துக்கு வந்து வசிக்கின்றவர்கள் யாரானாலும் அவர்கள் இங்கு கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடம் பேச வேண்டும்
.
பள்ளிகள் மூடப்படாது
கன்னட பள்ளிகள் எதுவும் மூடப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் கன்னட பள்ளிகளை மூட மாட்டோம். அதற்கு பதிலாக அந்த பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, மாணவர்கள் ஆர்வமாக வந்து சேரும் சூழ்நிலை உருவாக்கப்படும்.
எல்லைப்பகுதியில் உள்ள கன்னடர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. கல்விக்கு அதிக ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. மதிய உணவு, பால் வினியோகம், இலவச சைக்கிள், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருகை தரும் நாள் ஒன்றுக்கு ரூ.2 என்று பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தி உள்ளது.
வாழ்த்துக்கள்
தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அது முழுமையாக அமல்படுத்தப்படும். மாநில மக்கள் அனைவருக்கும் எனது ராஜ்யோத்சவா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் அமைதி, செழிப்பு, சந்தோஷம் பொங்கட்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.

No comments:

Post a Comment