Labels

rp

Blogging Tips 2017

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: டிச.16-ல் தொலைதூரக் கல்வித் தேர்வுகள் துவக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வு இம்மாதம் 16-ல் தொடங்குகிறது என கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில்
கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் டிச.16 முதல் இளங்கலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான மொழித் தேர்வுகளும், 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இளங்கலை முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளுக்கான பிரதான தாளுக்குரிய தேர்வுகள் நடைபெறுகிறது. இளங்கலை நூலக அறிவியல் மாணவர்களுக்கு இம்மாதம் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, முதுகலைத் தேர்வுகளும் 16-ல் தொடங்குகிறது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ,. பி.ஜி.டி.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கு இம்மாதம் 16 முதல் 28-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வுகள் குறித்த விரிவான கால அட்டவணையை கல்வி மையத்தில் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மாணவர்கள் முகவரிக்கு பல்கலைக் கழகம் மூலம் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள் தங்கள் அடையாள அட்டையுடன் தேர்வு எழுதஅனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்.அறிக்கையில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment