5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Wednesday, 18 December 2013

2015-16 முதல் பயிற்சி டாக்டர்களுக்கு கிராமங்களில் ஓராண்டு கட்டாயப் பணி

எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள் அனைவரும் வரும் 2015-16 ஆண்டு முதல் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
 பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து மூலமாக அவர் பதில் அளித்துள்ளார். "31-3-2012 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 3,459 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 3,005 மகப்பேறு மருத்துவர்கள், 3,270 குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் 3,667 உடற்கூறியல் மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 2,489 பணியிடங்கள் காலியாக உள்ளன.  மருத்துவ படிப்பிற்கான கல்வியாண்டு 2015-16 முதல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த டாக்டர்கள் அனைவரும் கிராமங்களில் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் பயிற்சி டாக்டர்களுக்கான நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது" என தனது பதிலில் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats