5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Sunday, 22 December 2013

இணையதள வழி மரபியல் படிப்பு விரைவில் துவக்கம்

"இணையதளம் வாயிலாக, மரபியல் சார்ந்த சான்றிதழ் படிப்பு, விரைவில் துவங்கப்படும்" என இந்திய மரபணு சங்கத்தின் செயலர் ஆனிஹாசன் தெரிவித்தார்.
சென்னை சங்கர நேத்ராலயாவில் உயிரணு மரபியல் ஆய்வு கூடம் துவக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, சங்கர நேத்ராலயாவும், பார்வை ஆராய்ச்சி மையமும் இணைந்து சென்னையில் நேற்று மரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை குறித்த கருத்தரங்கை நடத்தின. கருத்தரங்கை, சங்கர நேத்ராலயா இயக்குனர்
, பத்ரிநாத் துவக்கி வைத்தார்.
இதில் இந்திய மரபணு சங்க செயலர், ஆனிஹாசன் பேசியதாவது: மருத்துவத் துறை, அதிநவீன வளர்ச்சி பெற்றிருந்தாலும், இன்னும் சில குறைபாடுகள் உள்ளன. மரபணு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் படிப்புகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மரபியல் சார்ந்த சான்றிதழ் படிப்பை துவங்குவதற்கு, இந்திய மரபணு சங்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில், இணையதளம் வாயிலாக, இந்த சான்றிதழ் படிப்பு துவங்கப்படும்.
படிப்பை முடிக்கும் மாணவர்கள், மருத்துவமனைகளில், ஆறு மாதம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தென் மாநில அளவில், சங்கர நேத்ராலயா மற்றும் "மெடி ஸ்கேன்" மையங்கள், இதற்கான பயிற்சி நிலையங்களாக அமையும். இவ்வாறு, அவர் பேசினார்.
சங்கர நேத்ராலயா மரபியல் துறைத் தலைவர், ஜெயமுருக பாண்டியன், டாக்டர்கள் சுஜாதா, சுந்தரேசன், ராதா வெங்கடேசன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பேசினர். இதில், சங்கர நேத்ராலயா கல்வியாளர் மகாலிங்கம் உட்பட, 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment


web stats

web stats