தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 19-ஆம்
தேதி (புதன்கிழமை) முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.
விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட
சிறப்புப் பிரிவினருக்கு ஜூன் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வு
நடத்தப்படுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்
குழு அலுவலகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் (2013-14)
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 28,785
மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி.
வீரமணி புதன்கிழமை வெளியிட்டார்.
ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப்
மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முதல் 7 இடங்களைப் பெற்றுள்ள மாணவர்கள்
மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199.75 பெற்றுள்ள 3 மாணவர்கள் என
சிறப்பிடம் பெற்ற 10 பேரின் பெயரை அமைச்சர் கே.சி. வீரமணி அறிவித்தார்.
சுகாதாரத் துறையின் இணை
யதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ்-ல் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ்.
இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடத்தவும், இந்திய மருத்துவக் கவுன்சில்
அனுமதித்துள்ள கூடுதல் 285 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மத்திய அரசு அனுமதி
வழங்கியவுடன் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தவும் மருத்துவக் கல்வித் தேர்வுக்
குழு திட்டமிட்டுள்ளது.
நாமக்கல் மாணவன் முதலிடம்:
எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன்
பள்ளி மாணவர் எஸ்.அபினேஷ், கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று
முதலிடம் பெற்றுள்ளார்.
எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில்
சிறப்பிடம் பெற்ற 10 மாணவர்கள் விவரம்: 1. எஸ்.அபினேஷ்-கிரீன் பார்க்
மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல், (200-க்கு 200); 2.
ஜி.பரணிதரன்-எஸ்.வி.எம். மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை (200-க்கு 200);
3. எஸ்.பழனிராஜ்-வித்ய விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, வரகுராம்பட்டி,
திருச்செங்கோடு (200-க்கு 200); 4. எஸ்.தினேஷ்-ஸ்ரீவித்யா மந்திர்
மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 200); 5.
கே.ரவீனா-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
மாவட்டம் (200-க்கு 200); 6. ஜி.நந்தினி-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன்
பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 200); 7.
என்.பி.ஜெயஓவியா-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 200); 8. எஸ்.முத்துமணிகண்டன், நசரேத்
மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆவடி, சென்னை (200-க்கு 199.75); 9.
எஸ்.விக்னேஷ்-கிரீன் பார்க் மெட்ரிகுலஷன் பள்ளி, நாமக்கல் (200-க்கு
199.75); 10. கே.ஏ.ஹேம்நாத்-ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி,
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் (200-க்கு 199.75).
பி.இ. ரேங்க்
பட்டியலிலும் முதலிடம்: மேலே குறிப்பிட்ட 10 மாணவர்களில் முதலிடம்
வகிக்கும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் அபினேஷ்,
பி.இ. ரேங்க் பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளார். இதே போன்று
எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் இரண்டாவது சிறப்பிடம் பெற்றுள்ள
ஊத்தங்கரை எஸ்.வி.எம். பள்ளி மாணவர் ஜி.பரணிதரன், பி.இ. ரேங்க் பட்டியலில்
இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில்
சிறப்பிடம் பெற்றுள்ள ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி
மாணவி கே.ரவீனா, பி.இ. ரேங்க் பட்டியலில் நான்காவது சிறப்பிடத்தைப்
பெற்றுள்ளார்.
10,629 முதல் பட்டதாரிகள்: எம்.பி.பி.எஸ்.
படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 28,785 பேரில், 10,182 பேர் மாணவர்கள்;
18,603 பேர் மாணவிகள்.
மொத்தம் 10,629 மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத 1,503 பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் விண்ணப்பித்த மாணவர்களில் 1,488 பேர் முற்பட்ட வகுப்பை (எஃப்ஓசி)
சேர்ந்தவர்கள்; 12,131 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேரந்தவர்கள்.
ரேண்டம் எண்கள்: ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான
மாணவர்களில், 10 பேர் மட்டும் ரேண்டம் எண் மூலம் வரிசைப்படுத்தப்பட்டனர்
என்று மருத்துவக் கல்வித் தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார்
கூறினார்.
ஊத்தங்கரை பள்ளி சாதனை
எம்.பி.பி.எஸ். ரேங்க்
பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர்
மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் சிறப்பிடம் பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த எஸ்.தினேஷ், கே.ரவீனா,
ஜி.நந்தினி, என்.பி.ஜெயஓவியா (நால்வரும் 200-க்கு 200) மற்றும்
கே.ஏ.ஹேம்நாத் (200-க்கு 199.75) ஆகியோர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில்
சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இதே போன்று எம்.பி.பி.எஸ். ரேங்க்
பட்டியலில் முதல் சிறப்பிடத்தைப் பெற்றுள்ள எஸ்.அபினேஷ் (200-க்கு 200),
ஒன்பதாவது சிறப்பிடத்தைப் பெற்றுள்ள எஸ்.விக்னேஷ் (200-க்கு 199.75)
ஆகியோர் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்தவர்கள்