நேற்று, ஒரே நாளில் மட்டும், 1,000க்கும்
அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு, உடன் பணியாற்றிய
ஊழியர்கள், பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர்.
தமிழகத்தில், கல்வி, எரிசக்தி, வருவாய்,
மருத்துவம், உணவு உள்ளிட்ட, 37 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில்,
அதிகாரிகள், ஊழியர்கள் என, 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
இதில், 1 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், 2013 - 2014ம் ஆண்டில் ஓய்வு
பெறுகின்றனர். அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும், 100க்கும்
மேற்பட்ட ஊழியர்கள், நேற்று, ஓய்வு பெற்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும்
உணவு, கால்நடை, தொழிலாளர் நலன், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த,
1,000க்கும் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
No comments:
Post a comment