rp

Blogging Tips 2017

ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு ரூ.27 கோடியில் கட்டடங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 27 மாணவர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்காக ரூ.27 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மொத்தம் 1,342 மாணவர் விடுதிகள் இயங்கி வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாகக் குறைந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்க முன் வருகின்றனர்.

அவர்களுக்காக புதிய விடுதிகளைத் தொடங்கவும், ஏற்கெனவே வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்கும் உத்தரவிடப்பட்டது.
வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 54 விடுதிகளில் இந்த ஆண்டு 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி விடுதி ஒன்றுக்கு ரூ.1 கோடி வீதம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அவர் இப்போது உத்தரவிட்டுள்ளார். இந்த விடுதிகளில் 5 கிலோவாட் திறன்கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment