5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 3 January 2014

58 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்

மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசுகள் புதிதாக 58 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகளிலுள்ள 58 மாவட்ட மருத்துவமனைகள் 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களைக் கொண்ட கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதன் மூலம், கூடுதலாக 5,800 மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், ""இந்த மருத்துவக் கல்லூரிகளுக்காக மத்திய அரசு ரூ.8,457.5 கோடியும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ரூ.2,513.7 கோடியும் செலவிடும்.
பொதுவாக, இத்தகைய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசுகள் 25 சதவீதமும் நிதி வழங்கினாலும், சிறப்புச் சலுகை பெற்றுள்ள வடகிழக்கு மாநிலங்கள் 10 சதவீதம் நிதியளித்தாலே போதும். எஞ்சிய 90 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும்.
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியையும் அமைப்பதற்கு தலா ரூ.189 கோடி ஒதுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் 381 மருத்துவக் கல்லூரிகள், 49,918 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment


web stats

web stats