Labels

rp

Blogging Tips 2017

அரசுப் பள்ளியில் கருணாநிதியின் புகைப்படத்தை நீக்கியதால் பரபரப்பு


சேலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் இருந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் புகைப்படத்தை நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அமரகுந்தியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, அமரகுந்தி பஞ்சாயத்து தலைவர் குருசாமி (எ) மாதவன், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் மணிமுத்து உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு, அமரகுந்தி தொடக்கப்பள்ளிக்குச் சென்றனர்.


அங்கு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற மணிமுத்து, அங்கிருந்த கருணாநிதியின் படத்தை அகற்றுமாறு, தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை, சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த, கருணாநிதியின் புகைப் படத்தை கழட்டிவிட்டார்.

இதற்கிடையே இதுகுறித்து, தகவலறிந்த, தி.மு.க.,வினர், 25-க்கும் மேற்பட்டோர், பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இதத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தி.மு.கவினரை சமாதானம் செய்ததோடு புகைப்படம் மீண்டும் மாட்டப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment