Labels

rp

Blogging Tips 2017

மாற்றுத்திறனாளிகளிடம் கல்விக் கட்டணம் கேட்கும் பல்கலைக்கழகம்



கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்விக் கட்டணம் செலுத்துமாறு சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருப்பது அவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசின் கட்டண விலக்கு தொடர்பான ஆணைகள் பல்கலைக்கழகத்தில் முறைப்படியான நடைமுறைக்கே இன்னும் கொண்டுவரப்படவில்லை என்ற தகவலும் இப்போது தெரியவந்துள்ளது.

அரசாணைகள்: மாற்றுத்திறனாளிகள், கல்விக்கட்டணம் மட்டுமின்றி, தனிக்கட்டணம் உள்ளிட்ட எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

16.10.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 429-ல் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதலிருந்து முழு விளக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்களித்து அரசு ஆணையிடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

28.06.2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண்: 30-ல் கூறப்பட்டிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் கருத்துருவை ஏற்று, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகிய உயர்கல்வி பயிலும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளபோதும், பெருமைமிக்க சென்னைப் பல்கைலக்கழகம் மாற்றுத்திறனாளி மாணவர்களைக் கல்விக் கட்டணம் செலுத்த கூறியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகள் முறையிட்டபோது, இந்த அரசாணைகள் பல்கலைக்கழகத்தில் முறைப்படி நடைமுறைப்படுத்தவில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களில் ஒருவரான தீபக் கூறியது:

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்துள்ளேன். பல்கலைக்கழகம் இப்போது கல்விக் கட்டணமாக ரூ. 8,080 செலுத்துமாறு அறிவுறுத்தியிருந்தது.

போதிய குடும்ப வருமானம் இல்லாத காரணத்தால், கால அவகாசம் கேட்டு கடந்த சில மாதங்களாக இந்தக் கல்விக் கட்டணத்தை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

அப்போது, கல்விக்கட்டண விலக்கு தொடர்பாக அரசாணை இருப்பது குறித்து மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த அரசாணைகளின் நகல்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவனை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து முறையிட்டோம்.

அப்போது இந்த இரண்டு அரசாணைகளும் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என அவர் தெரிவித்துவிட்டார். இதனால் என்னை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளளர் என்றார்.

No comments:

Post a Comment