Wednesday, 15 January 2014

''கல்வித்துறை கூடாரமே காலியா கெடக்கு வே...'' =தினமலர் டீ கடை பெஞ்ச்


''கல்வித்துறை கூடாரமே காலியா கெடக்கு வே...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்தார் அண்ணாச்சி.

''ஏன், என்னாச்சு ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்றேன் வே... ரொம்ப வினோதமான துறை எதுன்னா, அது, பள்ளி கல்வித்துறை தான்... ஏன்னா, அரைச்ச மாவையே, திரும்ப, திரும்ப அரைச்சிட்டு இருப்பாவ... அரசு நலத்திட்ட பணிகளை பத்தி, மாநில அளவுல, ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்துவாங்க... இதுல, மாநிலம் முழுக்க இருந்து, அதிகாரிங்க வருவாங்க...

''ரெண்டாவது, மண்டல வாரியா கூட்டம் போடுவாங்க... அதுக்கப்பறம், மாவட்ட வாரியா... கல்வி மாவட்ட வாரியா... இப்படியே, திரும்ப, திரும்ப கூட்டம் நடக்கு வே... இதனால, அதிகாரிங்க எல்லாம் நொந்து போயிருக்காவ... 'சொல்ற வேலையை, செய்யறதுக்கு கூட, அவகாசம் தராம, அதுக்குள்ள அடுத்த மீட்டிங்கை நடத்தினா, எப்படி?'ன்னு, அதிகாரிங்க கேள்வி கேக்காவ...

''ஆனாலும், இதைபத்தி எல்லாம் கவலைப்படாம, மாநிலம் முடிஞ்சு, இப்ப மண்டல சுற்றை ஆரம்பிச்சிருக்காவ... நெல்லை, மதுரை, ஈரோடுன்னு, வரிசையா கூட்டம் இருக்காம்... அதனால, மந்திரி, செயலர், இயக்குனர்கள்ன்னு, எல்லாரும் சென்னையை விட்டு கிளம்பிட்டாவ... இதனால, கல்வித்துறை வளாகம் வெறிச்சோடி கிடக்கு...'' என்றார் அண்ணாச்சி.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats