Labels

rp

Blogging Tips 2017

திறனாய்வு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த ஆசிரியர்கள்


கர்நாடக மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சேருவதற்குமுன் இரண்டு வருட கல்வித்திட்டம் (பியுசி) ஒன்றில் பயிலவேண்டும். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் சமீபத்தில் அங்கு மேம்படுத்தப்பட்டது.

இவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் தரத்தை புதிய திட்டத்திற்கேற்ப மேம்படுத்திக் கொண்டுள்ளார்களா என்பதை அறிய அவர்களுக்கு ஒரு திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டது.பெங்களூருவில் செயல்பட்டுவரும் இந்திய அறிவியல் நிறுவனம் இந்தத் திறனாய்வுத் தேர்வை நடத்தியது.



ஆசிரியர்கள் நடத்திக்கொண்டிருக்கும் பியுசி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே கேள்விகள் தயாரிக்கப்பட்டிருந்தன.இதில் தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 56 பேர் நூற்றுக்கு இரண்டு முதல் பதினைந்து மதிப்பெண்களே பெற்றிருந்தனர்.இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர்கள் அனைவருமே முதுகலைப் பட்டதாரிகள் ஆவர்.

அதன்பின்னர் அவர்கள் அனைவருக்கும் அறிவியல் கழகத்தின்மூலம் பத்து நாட்கள் திட்டப்பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதன்பின் மறுபடியும் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களும் அந்தத் தேர்வில் 50-60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

கல்வித்திட்டத்தை மேம்படுத்தும்போது அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படவேண்டும். அப்போதுதான் அவர்களால் தங்களிடம் வரும் மாணவர்களுக்கும் திறமையாக கற்பிக்க இயலும் என்று இந்திய அறிவியல் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment