Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை


மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21, 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 முதல் 4-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அவர்கள் இந்தத் தேர்வை எழுத மாட்டார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான 220 நாள்கள் வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளுக்கு வாக்குப்பதிவுக்கு முன்னதாக விடுமுறை வழங்குவதில் பிரச்னை இருந்தது.
வாக்குப் பதிவையொட்டி 3 நாள்களுக்கு விடுமுறை விடப்படுவதால், அதற்குப் பதிலாக மார்ச் 22, ஏப்ரல் 5, 26 ஆகிய நாள்களில் பள்ளிகள் செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேலை நாள்களுக்கும், தேர்தலுக்கும் பிரச்னை வராமல் தேர்வு தேதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8,9,11 வகுப்புகளுக்கு ஏப்ரல் 3 முதல் 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 25-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
வாக்குப் பதிவையொட்டி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குப் பிறகு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats