Labels

rp

Blogging Tips 2017

பள்ளித் தலமனைத்துங் கோயில் செய்குவோம் என சொன்னது ஏன்

பாரதி அன்பர்கள் மத்தியில் பரவலாக எழும் ஐயப்பாடுகளில் ஒன்று, “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்’ என்கிற பாடலில் வரும் “பள்ளித் தலமனைத்துங் கோயில் செய்குவோம்’ என்கிற வரி பற்றியது.

தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று குறிப்பிடுபவர் பாரதி. கலைவாணியைத் துதித்துப் பாடும் 


“வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்’ பாடலில் கூடbharathi

”வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
 நாடு முற்றிலும் உள்ள வூர்கள் 
நகர்களெங்கும் பலபல பள்ளி; 
தேடு கல்வியிலாத தொரூரைத் 
தீயி னுக்கிரையாக மடுத்தல்” என்றும்,

“”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”-

என்றும் பாடிய மகாகவி பாரதி,

 எப்படி, எதற்காகப் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடினார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள். தெரியாத பெருவாரியானவர்கள் மட்டும் மேலே படியுங்கள்.


இது குறித்து கவிஞர் வாலி கூறுகையில், தமிழ்ப்பா’வை மணந்த தமிழ்ப் பாவை என்று மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மா பாரதிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார் கவிஞர் வாலி.

“”ஒருத்தி, ஒரு, செருக்கனோடு வாழலாம்; தருக்கனோடு வாழலாம்; சினப் பெருக்கனோடு வாழலாம், கெட்டவருக்கனோடு வாழலாம்! ஆனால், எப்போதும் எதையேனும் கிறுக்கு கிறுக்கென்று கிறுக்கும் கிறுக்கனோடு வாழ்தலென்பது தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயம்!” என்று தனக்கே உரித்தான வார்த்தை வித்தகத்தால் செல்லம்மா பாரதியின் சித்திரத்தை எழுத்தில் வடித்திருக்கும், கவிஞர் வாலியின் கரம் பிடித்துக்கை வலிக்க வலிக்கக் குலுக்க வேண்டும் போலிருக்கிறது!

நான் முதலில் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலும் தந்திருக்கிறார் அந்த நடைச் சித்திரத்தில். “”அடியேன் அறிந்தவரைஅதற்கான அர்த்தம் யாதென்றுரைப்பேன். பாரதி – பள்ளித் தலமென்று பள்ளிக்கூடத்தைக் குறிப்பிட்டிருக்க மாட்டான். அது, ஏற்கெனவே கலைமகள் கொலுவிருக்கும் கோயில்தானே!

அவன் குறிப்பிட்டது யாதெனில், பள்ளரும் அவர்தம் பத்தினிமார்களான பள்ளிகளும் இருக்கும் சேரியைத்தான்!” என்று விளக்குகிறார் கவிஞர் வாலி.
“”அசிங்கமும் அருவருப்பும் பாராமல், ஊர்ப்பணி ஆற்றும் உத்தமர்தம் உறைவிடத்தை ஆலயமாக்க விரைந்த முதல் ஆசாமி – அந்த முண்டாசுக்காரன்தான்!”பாரதி என்றாலே பிரமிப்பு!!!

No comments:

Post a Comment