Labels

rp

Blogging Tips 2017

விரைவில் அடுத்த அதிரடி ஆவின் பால் விலை ஜூன் முதல் உயருகிறது DINAKARAN


பால் கொள்முதல் விலை ஜனவரியில் 3 உயர்ந்தது. ஜூன் மாதம் முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு 6 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், பால், மின் கட்டணம், பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டது. வரும் மே மாதத்துடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நான்காம் ஆண்டு தொடக்கத்தில் பால், மின் கட்டணம், பஸ் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால்தான், மின்துறையில் 75 ஆயிரம் கோடி நஷ்டம், ஆவினில் ஸீ10 கோடி நஷ்டம், போக்குவரத்தில் ஸீ50 கோடி நஷ்டம் என்று பத்திரிகைகளின் வாயிலாக நஷ்டக்கணக்கை கசியவிட்டு வருகிறது.


ஆவின் பால் கொள்முதல் விலை கடந்த ஜனவரி மாதம் 3 உயர்த்தியதிலிருந்து மாதம் சுமார் ஸ80 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கோடை தொடங்கிய கடந்த 2 மாதங்களாக பால் கொள்முதல் சுமார் 4 லட்சம் லிட்டர் வரை குறைந்துள்ளது. இதனால் பால் பொருட்கள் உற்பத்தி குறைந்தது. பால் வினியோகத்தின் அளவு அதிகரித்துள்ளதால், அதை சமாளிக்க நாள் ஒன்றுக்கு 15 டன் பால் பவுடரை பாலாக்கி தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது ஆவின் நிர்வாகம். தற்போது ஆவின் நிர்வாகத்திடம் இருந்த பால் பவுடர் கையிருப்பு குறைந்த நிலையில், கர்நாடகம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலத்தில் அரசு நடத்தும் பால் நிறுவனங்களிடம் இருந்து 600 டன் பால் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது போதவில்லை என மேலும் 600 டன் பால் பவுடரை மே முதல்வாரத்தில் கொள்முதல் செய்ய உள்ளனர்.

எனவே ஜூன் முதல் வாரத்தில் ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு 6 உயர்த்தவும், பால் பொருட்களான நெய், பால்கோவா, வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் விலை உயர்வு இருக்கும் என்றும் ஆவின் வட்டாரம் தெரிவிக்கிறது. தற்போது, ஆவின் மாதாந்திர பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டர் ஸீ24 விலையில் விற்கப்படுகிறது. இதன் விலை ஸீ30 என உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பால் லிட்டர் 36 முதல் 40 வரை விற்கப்படுகிறது. ஆவின் பால் விலை உயரும் பட்சத்தில் தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்துவார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்து விட்டதால், பால் விலை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment