Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆட்சியை பிடிக்கிறது பாரதீய ஜனதா; 1984க்கு பின்னர் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறுகிறது

பாராளுமன்றத் தேர்தலில் 1984ம் ஆண்டுக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது.
16–வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி கடந்த 12–ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்தது. இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. 81 கோடியே 40 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
முதல் முறையாக எந்தவொரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்ற வாக்காளர்களின் விருப்பத்தை ஓட்டாகப் பதிவு செய்ய ஏற்ற விதத்தில் மின்னணு ஓட்டு எந்திரங்களில் ‘நோட்டா’ பொத்தான் இணைக்கப்பட்டிருந்தது.
16–ந் தேதி (இன்று) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 543 பாராளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 989 மையங்களில் நடைபெறுகிறது. தேர்தல் கமிஷனின் அறிவுரைப்படி, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி 333 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாரதீய ஜனதா கட்சி மட்டுமே ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கும் அதிகமாக 278 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் 1984ம் ஆண்டுக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறுகிறது. பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியும் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மத்தியியில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமர் ஆக உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 63 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா இல்லாத கட்சிகள் மட்டும் 148 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அ.தி.மு.க. 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிஜூ ஜனதா தளம் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 11 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 5 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

No comments:

Post a Comment


web stats

web stats