Labels

rp

Blogging Tips 2017

அண்ணாமலைப் பல்கலை.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2014-15-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம் வருகிற மே.2-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.


இந்த விண்ணப்பங்கள் ஜூன் 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.1500 ஆகும்.


அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி மற்றும் அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையில் நடைபெறும்.


விண்ணப்பப் படிவங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பணம் செலுத்துமிடம் (கேஷ் கவுன்ட்டர்) மற்றும் அனைத்து தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்களிலும் கிடைக்கும்.


மேலும் தகவல்கள் பெற www.annamalaiuniversity.ac.in என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment