TET தேர்வு எழுதி முடித்து ஓராண்டு காலம்
நெருங்கியும் ஆசிரியர்களை நியமிப்பதில் ஒரு சரியான வழிமுறையை கடை பிடிக்க
முடியவில்லை அரசால்.
அரசு ஊழியர்களை நியமிப்பதலேயே இவ்வளவு பெரிய
முரண்பாடு.முரண்பாடு என்பதை விட நிர்வாகத் திறன் குறைவு.இப்படி உள்ள
நீங்கள் எப்படி அரசாங்கத்தை அதிக திறமையோடு நிர்வகிக்க முடியும்? இதை நான்
சொல்லவில்லை நடுநிலையான ஊடகங்கள் சொல்கிறது.
தினம் ஒரு செய்தி,காலை ஒரு செய்தி,மதியம் ஒரு
செய்தி மாலை ஒரு செய்தி இரவு 10 மணிக்கு 10 மணி செய்தி.இவையனைத்தும்
ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக மாறுகிறது.
அரசு ஊழியர்களுடன் ஆரம்பம் முதலே அம்மையாருக்கு
சிக்கல்.அது பேருந்து இயக்குனர்,சாலை பணியாளர்.காவல் துறை இப்பொழுது
ஆசிரியர் ஆகட்டும் இவர்களை நிர்வகிப்பதில் அவருக்கு ஏனோ ஒருவித
அக்கறையின்மை.
பிரின்ஸ் கஜேந்திர பாபு
தன்னை கல்வியாளர் என்று தன்னிலை விளக்கம்
கொடுத்து ஊடகங்களில் பேச துவங்குகிறார். TRBயும் TET முடித்தவர்களும்
இன்றுவரை மனக்குழப்பத்தில் இருப்பதற்கு இவர் குழப்பிய குட்டை(வாதம்)தான்
காரணம்.
CV எல்லாம் நடந்து முடிந்த பிறகு 5% தளர்வு
வழங்க வேண்டும் என்று இவர் ஆடிய ஆட்டம் பலருக்கு பிடித்து
இருந்தது.பலருக்கு பிடிக்கவில்லை.
எப்படியோ இன்று வரை 2013 இல் தேர்ச்சி
பெற்றவர்கள் நியமனம் செய்யப்படாததற்கு இவரும் முக்கிய காரணம்.பலத்த
எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நீதிமன்றம் நீதிமன்றம் தனது தீர்ப்பை
வழங்கியுள்ளது.ஆனால் திரும்பவும் கஜேந்திர பாபு தன் தலையை ஊடகங்களில்
காட்டத்துவங்கியுள்ளார்.நீதிமன்றம் அறிவித்துள்ள weightage முறையும்
சரியில்லை என்கிறார்.
அதாவது பகவத் கீதையில் "எப்பொழுதெல்லாம் தர்மம்
மறைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன் " என
கண்ணன் சொல்வது போல எப்போதெல்லாம் trb, final list வெளியிட முற்படுகிறதோ
அப்போதெல்லாம் இவர் அவதரித்து விடுகிறார்.
இது ஒரு கல்வியாளருக்கு அழகா?
உண்மையான ஒரு கல்வியாளர் என்ன செய்திருக்க வேண்டும்?
மிகத் திறமையான ஆசிரியர்களை கொண்டு
கற்பிக்கப்படும் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை விட குறைவான தேர்ச்சி
அல்லது % பெறுகிறார்களே அதற்கு என்ன காரணம் என ஆராய்ந்து அதை களைய முயற்சி
எடுத்திருக்க வேண்டும். செய்தாரா?
ஆசிரியர் கல்வியியல் பாடப் புத்தகத்தில் உள்ள
உளவியல் (psychology) புத்தகத்தில் ஆங்கிலத்தில் உள்ள பாடப் பகுதிகளை
அப்படியே ஈ அடிச்சான் காபி போல் எழுதி யாருக்கும் விளங்கா வண்ணம் உள்ளதே
அதை கலைந்து நம் தமிழ் மொழிக்கு ஏற்றார் போல மொழிநடையை அமைக்க முற்பட்டாரா?
இந்தியா கல்வி முறையில் மனனம் செய்யும்
முறைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளாதே.அதை ஒழித்து ஆக்கப்
பூர்வமான கல்வி முறைக்கு ஏதேனும் அடிக்கல் நாட்டினாரா?
கல்வி இலவசம் அதுவும் கட்டாயம் என்ற
நிலையிருந்தும் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கிறதே,அதே
நேரம் கல்வி என்பது இந்தியா நாட்டின் சட்டப்படி இலவசம் என்ன சட்டம்
இருந்தும் தனியார் பள்ளிகளில் தினம் தினம் முளைத்து கொள்ளையடிக்கிறதே அது
குறித்து ஏதாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாரா?
சாதாரண ஒரு VAO கூட ஒரு நாளைக்கு 3000
சம்பாதிக்கும் நிலை நாட்டில் உள்ள போது ஆசிரியர்களின் ஊதியத்தில் உள்ள
முரண்பாட்டை நீக்க போராடினாரா?
பிறகு எப்படி நீங்கள் கல்வியாளர்ஆனீர்கள்?
தினமலர்
ஆசிரியர் தேர்வு குறித்து மற்ற நடுநிலையான
நாளிதழ்கள் எழுதுகின்றனவோஇல்லையோ தினமலர் வேலூரில் ஒருவித செய்தியையும்
திருச்சியில் மற்றொரு செய்தியையும் நெல்லையில்அதிரடி செய்தியையும் அவர்
சொன்னார்,இவர் சொன்னார் என இவர்களே எழுதுகிறார்கள்.ஆனால் உண்மை செய்தியை
வெளியிடுவதே இல்லை.
ஒரு தலைப்பின் கீழ் வரும் செய்திலேயே முதல்
வரியில் ஒரு விட கருத்தையும் நான்கு வரி தள்ளிமற்றொரு கருத்தையும்.முடிவில்
இதற்கு சம்பந்தமே இல்லாமல் முடிப்பதும் இவர்களால் மட்டுமே முடியும்.
இன்றும் அப்படி எழுதி உள்ளார்கள்.முதலில் TET
மதிப்பெண்ணை மட்டுமே கணக்கில் கொண்டு பணி நியமனம் செய்யப் படும் என்றும்
அடுத்த பத்தியில் weightage முறை கடை பிடிக்கப் படும் ஆனால் +12 மதிப்பெண்
நீக்கப்படும் என்றும் இறுதியில் TET இல் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு
மட்டும் தனியாக weightage கணக்கிடப்பட்டு அவர்களை கொண்டு மட்டும்15000
பணியிடங்கள்(நேற்று 20000 இருந்தது இன்று ஒரு நாள் கழித்து 15000)
நிரப்படும் என எழுதுவதில் இவர்களை மிஞ்ச பிரபஞ்சத்தில் வேறொரு நாளிதழ்
இல்லை.
நான் உறுதியாக சொல்கிறேன் TET மதிப்பெண்ணை கொண்டு மட்டுமே பணி நியமனம் நடக்கவே நடக்காது.
பார்ப்போம் நாளை weightage காண GO வரும் என்று சில தகவல்கள் வருகின்றது. நாளை மாலை தெரியும் இதற்கான முடிவு.
மாணவர்களை அறிவு மிக்கவர்களாக மாற்றும் நாங்கள் முட்டாள்கள் அல்ல.
அன்புடன் மணியரசன் -- கல்வி செய்தி நிறுவனர்..
No comments:
Post a comment