Labels

rp

Blogging Tips 2017

ரயில்வே பட்ஜெட்-ஒரு பார்வை

ரயில்வே பட்ஜெட்டில், 5 வெகு ஜன ரயில்களும், 5 பிரீமியம் ரயில்களும், 6 ஏ.சி., ரயில்களும், 27 எக்ஸ்பிரஸ் ரயில்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தவிர, எட்டு பயணிகள் ரயில்களும், 7 புறநகர் ரயில்களும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும், 11 ரயில்களும், மேலும் நீட்டிக்கப்படுமென, அறிவிக்கப்பட்டுஉள்ளது. புதிதாக, 18 வழித்தடங்களில், ரயில் போக்கு வரத்து ஏற்படுத்த, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இரட்டை, மூன்றாவது, நான்காவது ரயில் பாதைகள் அமைப்பது குறித்து, 10 வழித்தடங்களில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தட ஆய்வுகள்- மொத்தம், 18; இதில், தமிழகத்துக்கு எதுவும் கிடையாது.


*இரட்டைப் பாதை, மூன்றாவது மற்றும் நான்காவது பாதைகள் அமைக்கும் திட்டம்- மொத்தம், 10; இதில், தமிழகத்துக்கு எதுவும் கிடையாது.

*வெகு ஜன ரயில்கள் -மொத்தம், 5; இதில், தமிழகத்துக்கு எதுவும் கிடையாது.

*பிரீமியம் ரயில்கள்- மொத்தம், 5; இதில், தமிழகத்துக்கு ஷாலிமார் - -சென்னை, ஜெய்ப்பூர் - -மதுரை என, இரண்டு ரயில்கள்.

*ஏ.சி., எக்ஸ்பிரஸ் ரயில்கள் -மொத்தம், 6; இதில், தமிழகத்துக்கு எதுவும் கிடையாது.

*எக்ஸ்பிரஸ் ரயில்கள்- மொத்தம், 27. இதில், தமிழகத்துக்கு என, ஆமதாபாத் - வசாய் ரோடு - -சென்னை-, வாரமிரு முறை; விசாகபட்டினம் - -சென்னை, வாரம் ஒருமுறை, ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே
.
*பயணிகள் ரயில்கள்- மொத்தம், 8; இதில், தமிழகத்துக்கு என, எதுவும் இல்லை.

*புறநகர் ரயில்கள்- மொத்தம், 7; இதில், தமிழகத்துக்கு என, எதுவும் இல்லை.

*தற்போதுள்ள ரயில்களின் நீட்டிப்பு- மொத்தம், 11; இதில், தமிழகத்துக்கு என, எதுவும் இல்லை.

*சுற்றுலா ரயில்கள்- மொத்தம், 2; இதில், தமிழகத்துக்கு என, ராமேஸ்வரம் - -ஹரித்துவார் ரயில் ஒன்று.

மேல்மருவத்தூர், வேளாங்கன்னிக்கு சிறப்பு ரயில்கள்

கட்டமைப்புகள் இல்லாவிட்டாலும், எந்த ஒரு அரசும், புதிய ரயில்களை அறிவிக்க தவறுவது இல்லை. இதுகுறித்து, ரயில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க, நியமிக்கப்பட்ட காகோட்கர் கமிட்டி, கடுமையாக விமர்சித்து இருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.

புதிய ரயில்கள்

*58 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அவ்வப்போது ஏற்படும் தேவை, அதிகரிப்பை சமாளிக்க, இந்த சேவைகள் துவங்கப்பட உள்ளன. ஜனசாதாரண், பிரீமியம், ஏ.சி., எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், எம்.இ.எம்.யு., டி.இ.எம்.யு., என, ஏழு பிரிவுகளாக, இவை வரையறுக்கப்பட்டு உள்ளன.

*தமிழகத்திற்கு, ஜனசாதாரண் வண்டிகள் இல்லை; பிரீமியம் வண்டிகளில் ஷாலிமார் - சென்னை மற்றும் ஜெய்பூர் - மதுரை; ஏ.சி., எக்ஸ்பிரஸ் பிரிவில் ஒன்றுமில்லை; எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆமதாபாத் - சென்னை (வாரம் இருமுறை) மற்றும் விசாகபட்டினம் - சென்னை (வாரம் ஒருமுறை); மற்ற பிரிவுகளில் வண்டி ஏதும் இல்லை

*11 ரயில்களின் பாதைகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. இதிலும், தமிழகத்திற்கு ஏதும் இல்லை

*மேல்மருவத்தூர், வேளாங்கன்னிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவைகள் தொடரும்

சுற்றுலா ரயில்கள்:

*ராமேஸ்வரம் - ஹரித்வார் ஆன்மிக சுற்றுலா ரயில். அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்கள் வழியே செல்லும்

*விவேகானந்தரின் வாழ்கையை ஒட்டிய சுற்றுலா ரயில்

*பிரபலமான கோவில்கள், ஜோதிர்லிங்கங்கள், தேவி கோவில்கள் உள்ளிட்ட, வழிபாட்டு தல தொகுப்புகளாக, இந்துக்களுக்கான சுற்றுலா ரயில்கள். அதே போல், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுதர்கள், ஜைனர்கள் ஆகியவர்களுக்கும், வழிபாட்டு தல சுற்றுலா ரயில்கள்

*கர்நாடகா - மகாராஷ்டிரா வழிபாட்டு தலங்களை இணைக்கும் சுற்றுலா ரயில்
*வடகிழக்கு மாநிலங்களில், இயற்கை சுற்றுலா மற்றும் கல்வி சுற்றுலா ரயில்கள்

மணிக்கு 160 - 200 கி.மீ., வேக ரயில்கள்குறிப்பிட்ட பாதைகளில், தடங்கள் மற்றும் ரயில் பெட்டிகளை மேம்படுத்தி, அதில், மணிக்கு 160 - 200 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்தகைய ரயில்கள், அதிவேக ரயில்களை விட, ஒருபடி கீழ் என்றாலும், தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு, இந்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதன், முதல் கட்டமாக தான், டில்லி - ஆக்ரா சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி, 
தமிழகத்திற்கு,
*சென்னை- ஐதராபாத்
*சென்னை - பெங்களூரூ - மைசூர் ஆகிய பாதைகள் மேம்படுத்தப்படும்

No comments:

Post a Comment