Wednesday, 2 July 2014

உ.தொ.க.அலுவலர்கள் அலுவலக ஊழியர்களிடம் வேலை வாங்க அச்சப்படுகின்றனர்.....

உ.தொ.க.அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்த ஊழியரிடமும் வேலை வாங்க மிகவும் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

காரணம் அவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றுவதாலும் தன் சொந்த ஒன்றியம் அல்லது தன் சொந்த ஊரிலே பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதாலும் அலுவலர்கள் பல்வேறு காரணங்களுக்காக அச்சப்படுகின்றனர் சில ஊழியர்கள் செய்வது தவறு எனத் தெரிந்தும் தட்டிக் கேட்கமுடியாமல் தடுமாறுகின்றனர் அலுவலர்கள்.தன் சொந்த ஒன்றியம் அல்லது ஊரிலே பணியாற்றுவதன் காரணமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விதிகளுக்கு மாறாக சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் பரவிக்காணப்படுகின்றன.


         சில அலுவலகங்களில் அதிகாரிகளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சில ஆசிரியர் புரோக்கர்களை வைத்துக் கொண்டு வசூல் வேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர் இதை ஓராண்டோ அல்லது அதிகபட்சம் மூன்றாண்டோ பணிபுரியும் வெளி ஒன்றிய அல்லது வெளிமாவட்ட அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
            மேலும் சில உ.தொ.க.அலுவலகங்களில் பணிபுரியும் சொந்த ஒன்றிய ஊழியர்கள் தனக்கு வேண்டப்பட்ட ஆசிரியர்களை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து தனது பணிகளை அவர்களை வைத்து செய்து முடிக்கின்றனர்.இதை ஏதேனும் ஒரு ஆசிரியர் தட்டிக் கேட்பாரேயானால் அவரது அலுவலக வேலை ஏதும் நடைபெறாது ஆவணங்கள் காணாமல் போய்விடுகிறது.அதிகாரியின் அவசர வேலை அல்லது அவசர புள்ளி விவரங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை எனவே அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை
           .எனவே சொந்த ஒன்றியம் அல்லது சொந்த ஊரிலே பணிபுரியும் அலுவலக ஊழியர் ஒரு குறுநில மன்னர் போலவே செயல்படுகின்றனர் இதை சம்மந்தப்பட்ட உயர்அலுவலர்கள் ஆராய்ந்தார்கள் எனில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்களும் வெளிவர வாய்ப்புள்ளது....

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats