Friday, 1 August 2014

நள்ளிரவில் அமலுக்கு வந்தது : பெட்ரோல் 1 ரூபாய் குறைப்பு-டீசல் விலை யில் லிட்டருக்கு 0.60 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், டீசல் விலையில் லிட்டருக்கு 56 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றரை மாதங்களில் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மற்றும் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. பெட்ரோல் விலை குறைப்பால், சென்னையில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.78 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.76.93க்கு விற்கப்பட்டது. இதேபோல், டீசல் விலை யில் லிட்டருக்கு 0.60 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு லிட்டர் ரூ.62.30 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.61.70 ஆக விற்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், அமெரிக்க டாலருடனான ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதா லும் பெட்ரோல் விலையை குறைக்க அரசு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதேபோல், பெட்ரோல் பங்க்களில் மானியம் இல்லாமல் மொத்தமாக விற்பனை செய்யப்படும் டீசல் விலையில் லிட்டருக்கு 72 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது. அரசு கொள்கையின்படி, மொத்தமாக டீசல் வாங்கும் மாநில அரசு போக்குவரத்து கழகங்கள், ரயில்வே, ராணுவம் போன்றவற்றுக்கு சப்ளை செய்யப்படும் டீசல் விலையில் கடந்த ஜூலை 16ம் தேதி லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டது. இதனால், டெல்லியில் லிட்டர் ரூ.59.32 ஆக விற்கப்பட்டது. இதுதவிர, மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விற்பனையில் ஒரு சிலிண்டருக்கு (14.2 கிலோ எடையுள்ளது) ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கடந்த ஏப்ரல் 16ம் தேதி பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 70 காசுகள் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பில் உள்ளூர் வரிகள் சேர்க்கப்படவில்லை. உள்ளூர் வரி அல்லது வாட் வரி சேர்க்கப்பட்டதும் டெல்லியில் ஒரு லிட்டருக்கு உண்மையில் குறைந்தது 80 காசுகள். உள்ளூர் வரிகள் சேர்க்காமல்தான் இதுவரையில் எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றங்களை அறிவித்து வந்தன. ஆனால், நேற்று உள்ளூர் வரியை சேர்த்து பெட்ரோல் விலையில் குறைப்பை அறிவித்துள்ளது. இதனால், ஒரு லிட்டருக்கு சுமார் 91 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையில் லிட்டருக்கு 50 காசுகள் அதிகரிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்தபோது, உள்ளூர் வரியை சேர்க்கவில்லை. உள்ளூர் வரியை சேர்த்த பின்னர் டெல்லியில் லிட்டருக்கு 56 காசுகள் அதிகரித்துள்ளது. அரசு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் ஒவ்வொரு மாதம் 1ம் தேதியும் 16ம் தேதியும் மாற்றம் செய்து அறிவிக்கின்றன.

முந்தைய 15 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அன்னியச் செலாவணியில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதேநேரத்தில், டீசல் விலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பு உற்பத்தி செலவுக்கும் சில்லறை விற்பனைக்கு இடையிலான வித்தியாசம் குறையும் வரையில் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பின்னரும் ஒரு லிட்டருக்கு ரூ.1.33 இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இன்னும் மூன்று மாதங்கள் விலையை உயர்த்திய பின்னர்தான் சந்தை விலைக்கு ஏற்ப சில்லறை விலையும் சரியாகும்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats