Labels

rp

Blogging Tips 2017

அக்.,2 காந்தி ஜெயந்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை இல்லை

'மகாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களின் அலுவலகங்களுக்கு வர வேண்டும். மத்திய அரசின், 'துாய்மையான இந்தியா' என்ற, இயக்கம் தொடர்பான உறுதிமொழிகளை, மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும்சுதந்திர தினத்தன்று உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி, 'துாய்மையான இந்தியா என்ற இயக்கம், மகாத்மா காந்தி பிறந்த தினமான, அக்., 2ம் தேதி, நாடு முழுவதும் துவக்கப்படும்' என, அறிவித்தார்.அதன்படி, அக்., 2ம் தேதி முதல், ஐந்தாண்டுகளுக்கு, துாய்மையான இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களுக்கும், அமைச்சரவை செயலர் அஜித் சேத், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், கூறப்பட்டுஉள்ளதாவது:மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், அக்., 2ம் தேதி, தங்களின் அலுவலகங்களுக்கு வரவேண்டும். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில், 'துாய்மையான இந்தியா' குறித்த, உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த தேசிய அளவிலான இயக்கம் வெற்றிகரமாக நிகழவும், விழிப்புணர்வு பிரசாரங்கள் சரியான முறையில் நடைபெறவும், ஒவ்வொரு அமைச்சகமும், தங்களின் ஊழியர்களை, அக்., 2ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
மேலும், துாய்மையான இந்தியா இயக்கமானது, அனைத்து அரசு அலுவலகங் கள் மற்றும் பொது அலுவலகங்களில், மூத்த அதிகாரிகள் தலைமையில் மேற்கொள்ளப் பட வேண்டும். அன்றைய தினம், பிரதமர் நரேந்திர மோடி, இந்த இயக்கத்தை துவக்கி வைக்கிறார். துாய்மையான இந்தியா இயக்கம், அரசு அலுவலகங்களில் வெற்றிகரமாக நடை பெறும் வகையில், இன்று முதல், அரசு அலுவலகங்களில் உள்ள தேவை யற்ற குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.
நினைவு சின்னங்கள்துாய்மையான இந்தியா இயக்கத்தின் போது, வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,மருத்துவமனைகள், பணியிடங் கள், தெருக்கள், சாலைகள், சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தலைவர்களின் சிலைகள் உள்ள இடங்கள், நினைவுச் சின்னங்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் இதர பொது இடங்கள் சுத்தம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment