Labels

rp

Blogging Tips 2017

பள்ளிகளுக்கு விடுமுறை விடாததால் சேலம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகள் கடும் அவதி

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சேலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரோடுகள் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. மழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆனால் சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாததால்
இன்று காலை பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக அவதியடைந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தப்படியே சென்றனர். ஒரு சில இடங்களில் சேற்றில் சிக்கி குழந்தைகள் கீழே விழுந்தனர்.
ஏற்காடு பகுதியில் ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அரசு பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகள் குடை பிடித்தப்படியும், மழையில் நனைந்து கொண்டும் சென்றனர். பள்ளி வகுப்பறையில் அவர்கள் குளிரில் நடுங்கியப்படி இருந்தனர்

No comments:

Post a Comment