Wednesday, 15 October 2014

பனிரெண்டா? பன்னிரண்டா?


பன்னிரண்டு சரியா? பனிரெண்டு சரியா? என்று பல பேருக்குக் குழப்பம் இருந்து வருகிறது.
பன்னிரண்டு என்பதே சரி. பனிரெண்டு என்பது தவறு. பத்தும் இரண்டும் சேரும் போது பன்னிரண்டு உருவாகிறது. இலக்கண விதிகளின் படி பத்து, இரண்டு ஆகிய சொற்கள் சேரும் போது பத்து என்பது பன் என்ற சொல்லாக மாறுகிறது.
இந்தப் பன் என்பது இரண்டு என்கிற சொல்லோடு புணரும் போது புணர்ச்சி விதிகள் படி ஒற்று இரட்டித்து பன்னிரண்டு என்ற சொல் உருவாகிறது. இது ஒருபுறம் இருக்க, மரபுக்கவிதை எழுதும் போது, யாப்பிலக்கண விதிகளைப் பின்பற்றுவதற்காக, பன்னிரெண்டு என்பது வேண்டுமென்றே பனிரெண்டு என்று மாற்றி எழுதப்படுகிறது
.
இப்படி மாற்றி எழுதப்பட்டாலும் பொருள் அளவில் மாற்றம் இல்லை.ஆயினும், இலக்கண விதிகளின் படி பன்னிரண்டு என்பதே சரி. பனிரெண்டு என்பது தவறு. இதைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டு என்றே திருத்தமாக எழுதுவோம்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats