Labels

rp

Blogging Tips 2017

ரிலாக்ஸ் ப்ளீஸ்-கொஞ்சம் சிரிக்க, சிந்திக்க மனதை லேசாக்க சில கடிகள்

  • செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
  • இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
    சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
    ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
  • என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
    இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
    இதுதான் வாழ்க்கை .
  • பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வளருமா ?
  • என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
    அதேமாதிரி,
    என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
  • டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
    ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.
  • பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
    ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
    சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
    கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
    யோசிக்கனும்............ ...!!
  • தத்துவம் 1:
    இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
    ஆனா
    பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
  • தத்துவம் 2:
    ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
    மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .
  • தத்துவம் 3:
    தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
    ஆனா
    இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! 
  • தத்துவம் 4:
    வாழை மரம் தார் போடும்
    ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!
  • தத்துவம் 5:
    பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
    ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
    இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
  • தத்துவம் 6:
    லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
    சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
    அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
  • பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
    கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான ் ஆகனும்.
  • கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
    சத்தம் போட்ட கொலுசு வருமா ?
  • பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
    ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
    இதுதான் G உலகம்
  • T Nagar போனா டீ வாங்கலாம் .
    ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
  • என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
    திருப்பி அடிக்க முடியாது .
  • இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
    அதுக்காக,
    இளநீர்ல போர் போடவும் முடியாது ,
    பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..
  • உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
    ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
  • ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு
    ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....
  • நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
    ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .
  • வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
    ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
    (இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)
  • சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது
  • "Tea" / "Cofee" எது சுகாதாரம் இல்லாதது ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும்.
    "Coffee"ல 2 "ஈ " இருக்கும்.

No comments:

Post a Comment