Labels

rp

Blogging Tips 2017

மின் கட்டண உயர்வு விரைவில் அறிவிப்பு: உத்தேச பட்டியல் வெளியீடு

மின் கட்டணத்தை மேலும் உயர்த்துவது பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்டணத்தை உயர்த்த ஏற்கனவே முடிவு செய்து விட்டு கடமைக்காக மக்களிடம் கருத்து கேட்கிறீர்கள். நாங்கள் சொல்வதை நீங்கள் செயல்படுத்த போவதில்லை என்று கூட்டத்தில் பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
அங்கு பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டம் முடிந்ததால் மக்கள் தெரிவித்த கருத்துக்கள், ஆட்சேபனைகள், ஆலோசனைகள் குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது மின் கட்டண உயர்வை 10–ந்தேதி அறிவிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிகிறது.
உயர்த்தப்படும் மின் கட்டண பட்டியலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டதும் அந்த தேதியில் இருந்து இந்த மாதமே மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து விடும்.
மின் கட்டணம் உயர்த்தப்படும் போது அதில் அரசின் மானியம் எவ்வளவு என்ற விவரமும் வெளியிடப்படும்.
(2 மாதங்கள் – 1 யூனிட்)
யூனிட் தற்போதைய கட்டணம் புதிய கட்டணம்
0-100 ரூ.2.60 ரூ.3. 00
0-200 ரூ.2.80 ரூ. 3.25
201-500 ரூ. 4.00 ரூ. 4.60
501க்கு மேல் ரூ.5.75 ரூ. 6.60
கடைகள் ரூ.7.00 ரூ. 8.06
தொழிற்சாலைகள் ரூ. 5.50 ரூ. 7.22
தற்காலிக இணைப்பு ரூ. 10.50 ரூ.12.10
இதில் வீட்டு இணைப்புக்கு 500 யூனிட்டுக்கு மேல் போகும் போது அரசின் மானியம் கிடைக்காது. முழுத் தொகையையும் பொதுமக்கள் தான் கட்ட வேண்டும்.

No comments:

Post a Comment