Labels

rp

Blogging Tips 2017

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைஅடுத்த காங்குப்பம் 6–ம் வகுப்பு மாணவி கொலையில் மாணவன் கைது

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். பால் கறக்கும் கூலி தொழிலாளி. அவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ஏழுமலை (20), மகள்கள் சித்ரா (15), கீர்த்திகா (11).
ஏழுமலை பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். அருகில் உள்ள மாச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சித்ரா 10–ம் வகுப்பும், கீர்த்திகா 6–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் சித்ராவும், கீர்த்திகாவும் தனித்தனியாக சைக்கிள்களில் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி உள்ளனர். சித்ரா தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் படிப்பதற்காக பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால், கீர்த்திகா வீட்டிற்கு வரவில்லை.

இரவு முழுவதும் மகளை தேடினர். தொடர்ந்து நேற்று காலையிலும் உறவினர்கள் தேடியபோது, காங்குப்பம் அருகே உள்ள மாந்தோப்பில் கீர்த்திகாவின் புத்தகப்பை கிடந்துள்ளது. அதையடுத்து அந்த பகுதியை சுற்றி தேடியபோது கீர்த்திகா அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.
மாணவியின் கை– கால்கள் ரிப்பனால் கட்டப்பட்ட நிலையிலும், அவரது சுடிதார் அவிழ்ந்த நிலையிலும், உள்ளாடை விலக்கப்பட்ட நிலையிலும் இருந்தது.
மேலும் சம்பவ இடத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர் பாரி வந்து மாணவி கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வேலூரில் இருந்து துப்பறியும் மோப்பநாய் ரீட்டா சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
மாணவி கீர்த்திகாவின் வீடு பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாணவி வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள மாந்தோப்பில் பிணமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து மாணவியின் வீடு சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள்தான் இருக்கும். எனவே கீர்த்திகா வீட்டிற்கு வரும் வழியில் அவரிடம் பேச்சு கொடுத்து, அறிமுகமான நபர்களே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டது. மாணவி தேர்வு முடிந்து எங்கு யாருடன் சென்றார் என பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து பள்ளிக்கூடம் அருகே கொய்யா பழம் விற்பனை செய்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அப்போது மாணவி கீர்த்திகாவை 10–ம் வகுப்பு மாணவன் ஒருவனுடன் பார்த்ததாக கூறினார். இதனையடுத்து அந்த 10–ம் வகுப்பு மாணவன் குறித்து விசாரித்தனர்.
அப்போது கீர்த்திகாவின் ஊரில் இருந்து வரும் சரண்ராஜ் என்ற மாணவன் பள்ளிக்கு வராதது தெரியவந்தது. அவனிடம் விசாரிக்க போலீசார் வீட்டுக்கு சென்ற போது மாணவனின் பெற்றோர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.
போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் மாணவன் சரண்ராஜ் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
அங்கு விரைந்த தனிப்படை போலீசார் உறவினர் வீட்டில் இருந்த சரண்ராஜை பிடித்து விசாரித்தனர். போலீசாரை கண்டதுமே உடல் நடுங்க ஆரம்பித்துள்ளது. குரல்களும் தடுமாறின.
சரண்ராஜை வேலூர் அழைத்து வந்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சரண்ராஜ் மாணவி கீர்த்திகாவை கொலை செய்தது தெரியவந்தது.
அவனிடம் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் மிருகம் போல மாணவி கீர்த்திகாவை உருக்குலைத்து கொன்றது அம்பலமானது.
கீர்த்திகாவை அடைய வேண்டும் என்று சரண்ராஜ் பல நாட்களாக திட்டமிட்டுள்ளார். ஆனால் அதனை வெளிகாட்டாமல் நல்லவர் போல் கீர்த்திகாவிடம் நட்புடன் பழகியுள்ளான்.
கள்ளம் கபடம் அறியாத பிஞ்சு குழந்தையான கீர்த்திகா சரண்ராஜிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
நேற்று முன்தினம் தேர்வு முடிந்ததும் கீர்த்திகா தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அவரை எதிர்பார்த்து காத்திருந்த சரண்ராஜ் நானும் வீட்டுக்கு தான் போகிறேன் சேர்ந்து போகலாம் வா எனக்கூறியுள்ளான்.
அதற்கு சம்மதம் தெரிவித்த கீர்த்திகா அவரது சைக்கிளை எடுத்து கொண்டு சரண்ராஜூடன் புறப்பட்டார். பள்ளியை விட்டு வெளியே வந்ததும் சரண்ராஜ் கொய்யாபழம் வாங்கி கொடுத்துள்ளான். பின்னர் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
சம்பவம் நடந்த மாந்தோப்பு அருகே வந்ததும் சரண்ராஜ் தனது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளான். மாந்தோப்பில் சிறிது நேரம் விளையாடி விட்டு பிறகு வீட்டுக்கு செல்லலாம் என கூறியுள்ளான்.
அதற்கு சம்மதம் தெரிவித்த கீர்த்திகாவும் உடன் சென்றார். தோப்பின் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர். அப்போது கை, கால்களை கட்டி விளையாடலாம் என சரண்ராஜ் கூற எதுவும் அறியாத கீர்த்திகா தனது ரிப்பனை கழட்டி கொடுத்துள்ளார். அதனை வைத்து கீர்த்திகாவின் கை, கால்களை கட்டியுள்ளான்.
கட்டி முடித்ததும் சரண்ராஜ் தனது ஆசையை அவரிடம் தெரிவித்துள்ளான். அதற்கு மறுத்த கீர்த்திகா அழுது சத்தம் போட்டார்.
அடுத்த நொடியே மாணவியை கீழே தள்ளி மிருகம் போல செயல்பட ஆரம்பித்துள்ளான். துப்பட்டாவால் மாணவியின் வாயை கட்டியுள்ளான். பின்னர் ஆடைகளை கலைத்துள்ளான்.
பல்வேறு முயற்சி செய்தும் அவனால் மாணவியை கற்பழிக்க முடியவில்லை. இதனால் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து அவளது தலையில் அடித்துள்ளான். அவள் மயங்கி சுய நினைவை இழந்தாள்.
பின்னர் மார்பில் குத்தி கிழித்துள்ளான். கீர்த்திகா இறந்ததும் உடலை இழுத்து முள்புதர் அருகே போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு சென்றுள்ளான். அவனது ஆடைகளில் ரத்தக்கறை படிந்ததை கண்ட அவனது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தனத மகன் ஏதோ விபரீதம் செய்துள்ளான் என்பதை அறிந்த அவர்கள் உடனே அவனை வெளியூர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தகவல்களை சேகரித்த போலீசார் மாணவன் சரண்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச படங்களால் காம உணர்ச்சிக்கு அடிமையாகி மாணவியை கொன்ற மாணவன்:
மாணவன் சரண்ராஜ் வீட்டில் லேப்–டாப் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளான்.
ரூ.30 பணம் கொடுத்தால் சிலர் அவனுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து கொடுத்துள்ளனர்.
இரவு நேரங்களில் அடிக்கடி ஆபாச படங்களை பார்த்ததால் அவனது கவனம் முழுக்க செக்ஸ் உணர்ச்சிகளுக்கு மாறியது.
இதனையடுத்து தன்னுடன் பள்ளிக்கு வரும் மாணவி மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவியை அடைய திட்டமிட்டுள்ளான். கடைசியில் மாணவியை உருக்குலைத்து கொலை செய்யும் அளவுக்கு மாறிவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

No comments:

Post a Comment