Labels

rp

Blogging Tips 2017

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்: ஏற்பாடுகள் தொடங்கின

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும், முதல்–அமைச்சர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அதன்படி மார்ச் மாதத்துக்குள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும். இந்த தொகுதியில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்து இருந்தார்.


தற்போது ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அந்த தொகுதியில் அமைக்கப்பட வேண்டிய வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி சுமார் 250 வாக்குச்சாவடிகள் அமையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் 4 ஆயிரம் பேரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் கணக்கெடுப்பின்படி இந்த தொகுதியில் 2.63 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

பிப்ரவரி 5–ந்தேதி புதிய வாக்காளர்கள் பட்டியல் வெளியாகிறது. எனவே பிப்ரவரி மத்தியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
.
தலைமை தேர்தல் கமிஷன் எப்போது தேதி அறிவித்தாலும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

No comments:

Post a Comment